ஆரோக்கியமான உணவுகள் என்று ஆய்வுகளே சொல்லகூடியவை நம் பாரம்பரியமான உணவுகள் தான். அப்படியான உணவில் சிறுதானியங்களுக்கு தனி இடம் உண்டு. முந்தைய தலைமுறைகளின் ஆரோக்கியத்தில் சிறு தானியங்களுக்கும் பங்குண்டு. தானியங்களில் கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவை சிறுதானியங்கள். இதில் புரதம், நார்ச்சத்து,கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது எளிதில் செரிமானம் ஆககூடியவை. அரிசியின் அளவைவிட சிறியதாக இருக்கும் இந்த சிறுதானியங்கள் குறுகிய காலத்தில் வளரகூடிய பயிர் ஆகும். ஒவ்வொரு சிறுதானியமும் தனித்துவமான மணங்களையும் சுவைகளையும் கொண்டிருக்கிறது. உணவே மருந்து என்பதற்கு நல்ல உதாரணம் சிறுதானியங்கள் என்று சொல்லலாம். BUY HAPPY BARS NOW சிறுதானியங்கள் வெள்ளை, சாம்பல், மஞ்சள், சிவப்பு நிறங்களில் உள்ளது. இது உடலுக்கு தேவையான வைட்டமின் பி யின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தின் முழு அடக்கமாகவே சிறுதானியங்கள் விளங்குகிறது. உடலில் ரத்த அணுக்களின் உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தும...