புகுந்த வீட்டிலிருந்து பெண்ணை வெளியேற்ற முடியாது! முக்கிய வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!
திருமணமான பெண்களுக்கு புகுந்த வீடும் சொந்தமானது தான். திருமணமாகி, மணமகனின் வீட்டிற்குள் செல்லும் பெண்ணை, எந்த காரணமும் இன்றி, அந்த வீட்டிற்கு அப்பெண் உரிமையுடையவராக இல்லாதிருந்த போதும், அங்கிருந்து வெளியேற்ற முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், திருமணமான பெண்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், வடக்கு பெங்களூரில் வசிக்கும் ஒரு மூத்த குடிமக்கள், தனது மகனின் மனைவி, தங்களுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருவதாகவும், அவரை அந்த வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லி வற்புறுத்தியும், அவர் அதற்கு சம்மதிக்காமல் தொடர்ந்து அந்த வீட்டில் வசித்து வருவதாகவும், எனவே, அந்த வீட்டை தங்களது மருமகள் காலி செய்து தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கை மூத்த குடிமக்களின் உரிமை கோரலின் கீழ் அந்த வயதான தம்பதியினர் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பெண்களுக்கு சட்டரீதியிலான சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு பெண் திருமணம் செய்த பின்னர், அவருக்கு சொந்த வீட்டிலும் உரிமை உள்ளது ...