Skip to main content

Posts

Showing posts from March, 2023

சர்க்கரை நோய் தீர சித்தர்கள் காட்டிய வழிபாடு; தஞ்சை அருகே அதிசயக் கோயில்!

  சர்க்கரை நோய் தீர சித்தர்கள் காட்டிய வழிபாடு; தஞ்சை அருகே அதிசயக் கோயில்! சர்க்கரை நோயால் பாதிப்புறும் அன்பர்கள் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டால், அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை ஈசன் எடுத்துக்கொள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நம்பிக்கையே சிறந்த மருந்து என்பார்கள் பெரியவர்கள். அவ்வகையில், கட்டுக்குள் அடங்காத சர்க்கரை நோயால் கஷ்டப்படும் அன்பர்களுக்கு, `நோய் தீரும்’ என்று நம்பிக்கை அளிக்கும் இடமாகத் திகழ்கிறது ஒரு சிவாலயம். அந்தக் கோயிலின் சிவலிங்க மூர்த்தம் கரும்பு வடிவில் திகழ்கிறது என்பது வியக்கவைக்கும் தகவல்! அது எந்தக் கோயில், அங்கே என்ன பரிகாரம்... எப்படிச் செய்ய வேண்டும்... தெரிந்துகொள்வோமா? கரிகால் சோழருக்கும் பாண்டியருக்கும் நடைபெற்ற வெண்ணிப் போர் சரித்திரப் பிரசித்திபெற்றது. இந்தப் போர் நடைபெற்ற இடம்தான் கோயில்வெண்ணி. தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் முற்காலப் பெயர் திருவெண்ணியூர். புலவர் வெண்ணிக் குயத்தியார் பிறந்த ஊரும் இதுதான் என்பார்கள். இங்குள்ள மிகத் தொன்மையான அருள்மிகு கரும்பேஸ்வரர் ஆலயம்தான் சர்க்கரை நோய்க்கான பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. ச