Skip to main content

Posts

Showing posts with the label Dung Bug

சாணி வண்டு Dung beetle

Scarabaeus viettei (syn. Madateuchus viettei, Scarabaeidae) in dry spiny forest close to Mangily, western Madagascar சாணி வண்டு (Dung beetle) என்பது ஒரு வண்டினமாகும். இவை ஆப்பிரிக்கா முதல் அண்டார்டிகா வரையும் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வண்டு விலங்குகளின் சாணத்தை உண்டு வாழ்கின்றது. சிறிய வண்டுகள் சாணக்குவியலுக்குள் புகுந்து அச்சாணக்குவியல் தீரும்வரை அங்கேயே தங்கி வாழும்  இவ்வண்டில் 5,000 இனங்களுக்கு மேல் உண்டு. தோற்றம் இது ஒரு மிமீ முதல் மூன்று செ.மீ வரை என பல அளவுகளில் காணப்படுகின்றது. இதன் வடிவம் ஏறக்குறைய தென்னை மரத்தின் குருத்துகளை குடைந்து நாசம் செய்யும் காண்டாமிருக வண்டினை ஒத்திருக்கும். கருமை நிறமுடையது. முன்பகுதி அரைவட்டவடிவில் மண்வெட்டி போன்ற அமைப்பு காணப்படுகிறது.  அதன் முன்னங்கால்கள் குட்டையாகவும் பின்னங்கால்கள் நீண்டும் காணப்படும். இயல்புகள் மண்வெட்டி போன்ற அமைப்பின் மூலம் சாணத்தின் ஒரு பகுதியை வெட்டி பிரித்து எடுக்கவும் பூமியில் பள்ளம் தோண்டவும் முடியும். சாண வண்டுகளுக்கு மோப்ப சக்தி அதிகம். யானை, மாடு போன்ற விலங்குகள் சாணம் போட்டவுடன் அதிலிருந்து...