ஊ ருக்குச் செல்லும் போது சென்னை சென்ட்ரலில் எப்போதுமே ஒரு “முட்டை பிரியாணி” பஞ்சாயத்து இருக்கும், இந்த முறையும். Image Credit – blog.sagmart.com சென்னை சென்ட்ரலில் இந்திய ரயில்வே அமைப்பின் கீழ் வரும் பிரிவில் ஒரு பகுதியில் தயாராக இருக்கும் உணவுகள் பிரபலம். உணவை தயாராக வைத்து இருப்பார்கள் நாம் வாங்கிக்கொண்டு ரயிலிலோ அல்லது நிலையத்தின் வேறு பகுதியிலோ சென்று சாப்பிடலாம். இங்கே முட்டை, கோழி, ஆடு பிரியாணிகள் மற்றும் பல்வேறு வகையான உணவுகள் உள்ளன. இதில் உள்ள முட்டை பிரியாணியின் விலை 49₹. என்னுடைய விருப்பம் முட்டை பிரியாணி. எனக்கு இங்கே தான் பிரச்சனை. 49₹ என்பதன் நோக்கம் என்ன? மீதி ஒரு ரூபாயை இவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் ரயில்வே நிர்வாகம் எதற்கு 50₹ என்று வைக்காமல் 49₹ என்று வைத்துள்ளது என்பது தான் புரியவில்லை. இவர்களே கொள்ளையை ஊக்குவிக்கிறார்களா! இது குறித்துப் புகாரும் அனுப்பினேன் ஆனால், சரியாகவில்லை. மின்னணு பரிவர்த்தனை இது போன்ற இடங்களில் மிக அவசியம். இங்கே ஏன் இல்லை? எப்போதும் எனக்கு இந்த ஒரு ரூபாய்க்காகப் பிரச்சனை தான், இந்த முறையும...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.