Skip to main content

Posts

Showing posts with the label food before sleep

சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 6 விஷயங்கள்!

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு முடித்ததும் ரொட்டீனாக சில பழக்கங்களைப் பலர் பின்பற்றுகிறார்கள். உணவு இனிப்பு சாப்பிடுவது, பீடா போடுவது, புகைபிடிப்பது என நீளமான பட்டியலே அதற்கு உண்டு. உண்மையில் உணவு தாரிணி கிருஷ்ணன்உட்கொண்டவுடன் செய்யவே கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றிக் கூறுகிறார், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். புகைபிடிப்பது பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்ததும் புகைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவறான பழக்கம். இயல்பாகவே புகைபிடிப்பது உடலுக்கு தீங்கு எனும் பட்சத்தில், சாப்பிட்டு முடித்தவுடன் புகைப்பிடிப்பது செரிமானத்தை விரைவில் நடத்தவிடாமல் தடுத்து அஜீரணத்தை உண்டாக்கும். எனவே, புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற இரண்டு பழக்கங்களையும் சாப்பிட்டு முடித்தவுடன் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடித்தல் திரவ உணவுகள் உட்கொள்வது திடமான உணவுகளை காலை அல்லது மதிய உணவாக உட்கொண்ட பின்னர், திரவ உணவுகளான பழச்சாறு போன்றவற்றை உடனடியாக அருந்தக் கூடாது. ஏனெனில், இது செரிமானச் சாறுகள் எனப்படும் Digestive juicesகளை உருவாகவிடாமல் தடுக்கும். மேலும், மதிய வே...