1935-ல் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1949-ல் இந்திய அரசால் நாட்டுடமையாக்கப்பட்டது. மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது. நாடு முழுவதுமுள்ள இந்த வங்கியின் கிளைகளில் 926 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. காலியிடங்கள்: அகமதாபாத் - 19, பெங்களூரு - 21, போபால் - 42, புவனேஸ்வர் - 28, சண்டிகர் - 35, சென்னை - 67, கவுகாத்தி - 55, ஐதராபாத் - 25, ஜெய்பூர் - 37, ஜம்மு - 13, கான்பூர் மற்றும் லக்னோ - 63, கொல்கத்தா - 11, மும்பை - 419, நாக்பூர் - 13, புதுடெல்லி -34, பாட்னா - 24, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி - 20 என்று மொத்தம் 926 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பொது - 473, எஸ்சி - 98, எஸ்டி - 80, ஓபிசி - 192, ஈடபிள்யூஎஸ் - 83 என்று இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வித் தகுதி இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 50 சதவிகிதத்திற்கு மேலான மதிப்பெண்ணுடன் ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர், தேர்ச்சிபெற்றிருந்தால் போதுமானது. க...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.