Skip to main content

Posts

Showing posts with the label nivar cyclone live

8 மணிக்கு நிவர் புயல் கரையை கடக்கிறது.. பிறகு உள் மாவட்டங்களில் சூறாவளியாக சுழன்றடிக்கும்- வார்னிங்

சென்னை : நிவர் புயல் இன்று இரவு 8 மணிக்கு மேல் கரையை கடக்கத் தொடங்குகிறது. புயல் கரையை கடந்த பிறகு 6 மணி நேரத்திற்கு பாதிப்பு இருக்கும் என்று, தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார். பாலச்சந்திரன், இன்று மாலை, 3.30 மணிக்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிவர் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று இரவு 8 மணியளவில், புதுச்சேரி அருகே கரையைக் கடக்க கூடும். நிவர் புயலின் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை தொட்டு கடக்க ஆரம்பிக்கும், அதன் மையப்பகுதி கரையை கடக்க சுமார் 2.5 மணி நேரம் ஆகும். தற்போதைய நிலவரப்படி, புயல் கரையை கடந்த பிறகு, கடலோர மாவட்டங்களில் அதன் தாக்கம் 6 மணி நேரத்துக்கு நீடிக்கும். இதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும். சூறாவளி காற்று இதன் காரணமாக, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங...

145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்

சென்னை : வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த பருவ மழையில் ஒருமுறை கூட காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகமல் இருந்தது. இந்நிலையில் குமரிக் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவானது. LADIES TOPS 20%Off Buy Now அது மெல்ல மெல்ல வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கைக்கு தென்கிழக்கே நிலை கொண்டு இருந்தது. புயலாக மாறியது நிவர்   இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் நேற்று அதிகாலை புயலாக மாறியது. அதன்பின்னர் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வந்தது. BUY TORCH LIGHTS DISC UP TO 35% புதுவை அருகே கடக்கும்...