எ ங்கே சென்றாலும் பெரிய வரிசை நமக்காகக் காத்துக்கொண்டு இருக்கும். வரிசையைக் கண்டு பயந்தே திட்டத்தை மாற்றுபவர்கள் உண்டு. இது போன்ற பிரச்சனைகளில் நமக்கு இளைப்பாறுதல் தருகிறது ரயில்வே நிர்வாகத்தின் UTS (உள்ளூர் ரயில்) செயலி (App). DOWNLOAD திறன்பேசி (Smart Phone) போதும் இச்செயலி மூலம் உள்ளூர் ரயில்களில் நம்மால் நம் திறன்பேசி மூலமாகவே அனைத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். நடைமேடை சீட்டு, மற்ற இடங்களுக்காகச் செல்வதற்கான பயணசீட்டு, திரும்ப வருவதற்கான பயணச்சீட்டு (Return ticket) என்று செயலியலியே முன்பதிவு செய்ய முடியும். வரிசையில் நின்று அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. இதில் நடுவில் நுழைந்து நம்மைக் கடுப்படிப்பவர்கள் தனி. இது பற்றிப் பேசிக்கொண்டு இருந்த போது அலுவலக நண்பர் செந்தில் இச்செயலியை அறிமுகப்படுத்தினார். இச்செயலியை ரயிலில் செல்பவர்கள் பயன்படுத்திக்கொண்டு இருப்பீர்கள். இது குறித்துத் தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம். இதை எப்படிப் பயன்படுத்துவது? https://www.utsonmobile.indianrail.gov.in முகவரியிலோ அல்லது UTS செயலியிலோ பயனர் கணக...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.