Skip to main content

Posts

Showing posts with the label 2021

இன்றைய ராசிபலன் 07/01/2021 Tamil Daily Rasi Palan 2021

  மேஷம் மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள். மிதுனம் மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தினருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள். கடகம் கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்ட...

மேஷ ராசிக்கு நல்ல மாற்றங்கள் நிகழுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 மேஷ ராசிக்கு நல்ல மாற்றங்கள் நிகழுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 27.12.2020 முதல் உங்கள் ராசிக்கு 10-ல், தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனி பகவான்.  யோக பலன்கள் வாய்க்கும். உங்களின் அனைத்துத் திறமைகளும் வெளிப் படும். தொட்டது துலங்கும்.  உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக. 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் :  #MeshaRasi, #Sanipeyarchi, Palan 2021

ரூ. 2500 -க்கான டோக்கன் ! இன்று முதல் விநியோகம்

பொங்கல் பரிசு மற்றும் பரிசு தொகுப்பை பெற இன்று முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை,வெல்லம்,முந்திரி,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார் . ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் 2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  ஆகவே தமிழகத்தில் அனைத்து ஆட்சியர்களுக்கும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற இன்று முதல் டிசம்பர் 30 -ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு வழங்கும் வகையில் டோக்...