Skip to main content

Posts

Showing posts with the label December

8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறப்பு மாணவர்கள் சட்டத்தை மீறினால் கைது: போலீஸ் கடும் எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன.  தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக இன்று முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.  கல்லூரிகளுக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் 'ரூட் தல' மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக ஆட்டம் பாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். கடந்தாண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் 'ரூட் தல' பிரச்னையில் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாநகர பேருந்தை வழிமறித்து பட்டாக்கத்தியால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க மாநகர காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி, புதுக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே யார் 'ரூட் தல' என்ற போட்டியில் அடிக்கடி நடுரோட்டில் மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. தற்போது, 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கல...