கூ குள் தான் எடுக்கும் கணக்கெடுப்புக்கு நமக்குப் பணம் தருகிறது ஆனால், அதை நாம் Google Play Store தவிர்த்து வேறு எங்கும் செலவு செய்ய முடியாது. Google Play Store ல் நமக்கு விருப்பப்பட்ட Apps, Movies போன்ற அவர்கள் அனுமதிக்கும் சேவைகளை, கொடுக்கப்பட்ட கால அளவுக்குள் இந்தத் தொகையைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம். Image Credit – Hip2Save.com இதில் நாம் பதில் அளித்தால், கூகுள் தோராயமாக 10₹ முதல் நமக்குத் தருகிறது. எனக்கு மூன்று கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு 30.77 ₹ கொடுத்துள்ளது. கூகுள் ஏன் நமக்குப் பணம் தர வேண்டும்? ஆதாயம் இல்லாமல் எவரும் எவருக்கும் எதையும் இலவசமாகத் தர மாட்டார்கள். கூகுளும் விதிவிலக்கல்ல. கூகுள் இதற்கென்று ஆட்களை நியமித்துக் கணக்கெடுத்து ஆய்வு நடத்தி செய்வதற்கு ஆகும் செலவு மிக அதிகம் ஆனால், அதே தன்னுடைய பயனாளர்கள் மூலமாக ஆய்வுகளை நடத்தினால் செலவு குறைவு. இந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து, தன்னுடைய நிறுவனத்தின் தேவைகளை, மாற்றங்களைச் செயல்படுத்தி மேம்படுத்த நினைக்கிறது. பணம் கிடைக்கிறது என்றால், யாருமே இதில் கலந்து தங்கள் கரு...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.