Skip to main content

Posts

Showing posts with the label find your Health

Amla benefits: தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்...

  கொஞ்சம் அதிக புளிப்பு, கொஞ்சமான இனிப்பு, எஞ்சிய துவர்ப்பு, சற்றே கசப்பு என்றிருக்கும் நெல்லிக்கனி இன்று பரவலாக எல்லோரது வீட்டிலும் பழங்கள் காய்களுடன் நீக்கமற நிறைந்திருக்க தொடங்கியிருக்கிறது. எலுமிச்சையைத் தொடர்ந்து ராஜ கனி என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்கனியின் பங்கு அளப்பரியது. Benefits Of Amla Juice ? ஆயுளை வளர்க்கும் கனி என்று அழைக்கப்படும் சிறப்பு நெல்லிக்கனிக்கு மட்டுமே உரியது. சமைத்தாலும் வேக வைத்தாலும் காயவைத்தாலும் வெட்டி நறுக்கினாலும் மொத்த பயனையும் வீணாக்காமல் தரும் சத்து மிகுந்த கனி இந்த நெல்லிக்கனி. என்றும் 16 ஆக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அவ்வாறே இருக்க உதவுவதும் இந்த நெல்லிக்கனி தான். இதை ஆயுர்வேதத்திலும், சித்தர்களும் கூறியிருக்கிறார்கள். ஆயிர்வேதம் மற்றும் யுனானி மருத்துவங் களில் பெருமளவு நெல்லியைப் பயன்படுத்திவருகிறார்கள். ஏன் ஆய்வுகளும் நெல்லிக்கனியின் பலனை பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறது. முதுமையைத் தள்ளிப்போடும் அற்புதமான குணநலன்களைக் கொண்டிருக்கும் நெல்லிக்கனியில் வேறு என்னென்ன சத்து இருக்கிறது. நெல்லிக்காயை அப்படியே அல்லது சாறாக்கி தினமும் காலையி...

சிறுதானியங்களில் அப்படி என்ன தான் இருக்கு?எல்லோரும் தெரிஞ்சுக்கங்க

  ஆரோக்கியமான உணவுகள் என்று ஆய்வுகளே சொல்லகூடியவை நம் பாரம்பரியமான உணவுகள் தான். அப்படியான உணவில் சிறுதானியங்களுக்கு தனி இடம் உண்டு. முந்தைய தலைமுறைகளின் ஆரோக்கியத்தில் சிறு தானியங்களுக்கும் பங்குண்டு. தானியங்களில் கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவை சிறுதானியங்கள். இதில் புரதம், நார்ச்சத்து,கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது எளிதில் செரிமானம் ஆககூடியவை. அரிசியின் அளவைவிட சிறியதாக இருக்கும் இந்த சிறுதானியங்கள் குறுகிய காலத்தில் வளரகூடிய பயிர் ஆகும். ஒவ்வொரு சிறுதானியமும் தனித்துவமான மணங்களையும் சுவைகளையும் கொண்டிருக்கிறது. உணவே மருந்து என்பதற்கு நல்ல உதாரணம் சிறுதானியங்கள் என்று சொல்லலாம். BUY HAPPY BARS NOW சிறுதானியங்கள் வெள்ளை, சாம்பல், மஞ்சள், சிவப்பு நிறங்களில் உள்ளது. இது உடலுக்கு தேவையான வைட்டமின் பி யின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தின் முழு அடக்கமாகவே சிறுதானியங்கள் விளங்குகிறது. உடலில் ரத்த அணுக்களின் உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தும...

இருமல் சத்தத்தை வைத்தே காசநோயைக் கண்டறியும் புதிய ஆப்!

காசநோயின் தலைநகரம் இந்தியா என்று சொல்லும் அளவுக்கு அதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மொத்த காசநோயாளிகளில் 27 சதவிகிதம் பேர் இந்தியர்களே. ஒரு நாளைக்கு 1,150 பேர் என ஆண்டுக்கு 4.2 லட்சம் பேரை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது இந்தக் கொடிய நோய். Tuberculosis இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்களில் சுமார் 10 லட்சம் பேர் இன்னும் அடையாளம் காணப்படாமலேயே இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தியாவில் காசநோய் அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் தாமதமாகக் கண்டறியப்படுவதே. இந்த நிலையை மாற்ற முயன்று வருபவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணர் ராகுல் பாத்ரி முக்கியமானவர். இவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர். அந்தத் தாக்கம்தான் காசநோயைக் கண்டறியும் டிம்ப்ரே (Timbre) என்ற மொபைல் ஆப்பை உருவாக்க அவரைத் தூண்டியது. காசநோய் மட்டுமன்றி நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி), ஆஸ்துமா மற்றும் சாதாரண இருமல், அறிகுறியற்ற நிலையில் உள்ள நுரையீரல் சார்ந்த பிற நோய்களையும் துல்லி...