அடல் பென்ஷன் திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதியத்தை 10,000 ஆக உயர்த்தவும், திட்டத்தில் சேரும் வயதை 50 வரை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அடல் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் 18 வயதில் இருந்து 40 வயது வரை உடையவர்கள் சேரலாம். இத்திட்டம் வங்கி கணக்கு மூலமாகவே செயல்படுத்தப்படுவதால், வங்கி கணக்கு மிக முக்கியமானதாக உள்ளது. இதில் சேருபவர்களுக்கு அவர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப60 வயதில் இருந்து குறைந்த பட்சம் 1000 முதல் 5000 வரை பென்ஷன் கிடைக்கும். இதற்காக அரசு தனது சார்பில் ஒரு தொகையை செலுத்தும். இத்திட்டத்தில் சேருபவர்களின் வயதுக்கு ஏற்ப அவர்கள் செலுத்த வேண்டிய தொகை மாறுபடும். திட்டத்தில் சேர்ந்தவர் இறந்து விட்டால், அவர் நியமித்த முதல் வாரிசுதாரருக்கு அதே பென்ஷன் தொகை கிடைக்கும். அவரும் இறந்து விட்டால், 2வது வாரிசுதாரருக்கு மொத்த தொகை வழங்கப்படும். இந்நிலையில், இந்த திட்டத்தில் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 10,000 ஆக உயர்த்தவும், சேரும் வயதை 50 வரை உயர்த்தவும், வரி பலன்களை தற்போது உள்ள 50,000ல் இருந்து 1 லட்சமாக உயர்த்தவும் மத்திய ...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.