விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக நடத்தப்படும் போட்டிகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் தற்போதே ஈடுபடத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, SVEEP எனப்படும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார். அதில், வரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. INSTALL & GET MONEY மாநில அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். அவை, * போஸ்டர்கள் வரைதல் * கவிதை மற்றும் பாட்டுப் போட்டி * ஸ்லோகன் எழுதுதல் ஆகிய போட்டிகள் ஆகும். இதற்காக மாநில தேர்தல் ஆணையத்தின் www.elections.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் போட்டிகளுக்கு “ SVEEP - 2020 ஆன்லைன் ...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.