Skip to main content

Posts

Showing posts with the label 5Days

தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு.!!

இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுவார்கள். கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  கிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதுபோல் இயேசு பாலன் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவு கூறும் வண்ணம் வீடுகளில், குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசு பாலன் அவரது பெற்றோர்கள் சொற்களாக வைக்கப்பட்டிருக்கும். மேலும் ஆடு, மாடு சிறிய உருவங்கள் இடம் பெற்றிருக்கும். கிறிஸ்மஸ் நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துபிறப்பு சிறப்பு வழிபாடுகளும், கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்நிலையில், வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இன்று முதல் வருகிற 27-ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  மேலும், வரும் 28ஆம் தேதி வழக்கம்போல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.