Skip to main content

Posts

Showing posts with the label term's

வாட்ஸ்ஆப் விதிமுறைகளை ஏற்காவிட்டால் செயலி அழிந்துவிடும்: பிப்.8 முதல் நடைமுறை

புது தில்லி: வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளது. அவற்றுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே தொடர்ந்து செயலியை பயன்படுத்த முடியும், இல்லையென்றால் அது அழிந்துவிடும். வாட்ஸ்ஆப் விதிக்கும் விதிமுறைகளை ஏற்காவிட்டால், செயலியை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் என்றும், இது பிப்ரவரி 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாட்ஸ்ஆப்-பில் வரும் தகவல்களை சாதாரணமாக நிராகரிக்காமல், நன்கு படித்துப் பார்த்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளராக நீடிக்க முடியும். காலத்துக்கு ஏற்ப பல்வேறு பல புதிய சேவைகளைப் பயன்பாட்டாளர்களுக்கு வாட்ஸ்ஆப் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல்களும், பயன்பாட்டாளர்களின் தரவுகளும் பாதுகாப்பானதல்ல என்று வெளியான செய்திகளால் உலகம் முழுவதும் இந்த செ...