ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். Adv : வீட்டு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு சிறப்பான டீல்ஸ்! கொரோனாவும், பொது முடக்கமும் மக்களின் வாழ்வை புரட்டிப்போட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. முக்கிய பண்டிகை நாள்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பெருமளவில் ஆர்வம் காட்டுவர். எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் வரும் ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தங்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த மாதம், 25ஆம் தேதி ஆயுத பூஜையும், 26ஆம் தேதி, சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்பட உள்ளது. 24ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் மூன்று நாள்கள் விடுமுறையாக உள்ளது. இதனால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வழக்கமான கூட்டம் இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர். இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள், “அக்டோபர் 2ஆம் தேதி, அரசு விரைவு போக்குவரத்து கழங்களின் சார்பில், 600 பேருந்த...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.