துளசி (இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றன என்றும், இது, உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது என்றும் பொருள் படும் தகவல்கள் வாட்சாப் மூலம் உலா வருகின்றன. அது மட்டுமல்ல, சில மைய நீரோட்ட நாளேடுகளும், செய்தி இணைய தளங்களும்கூட இத்தகைய கூற்றுகளை உள்ளடக்கிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. தாவரவியலாளர்கள் என்பவர்களை மேற்கோள் காட்டிக்கூட இத்தகைய கருத்துகள் வெளியிடப்படுகின்றன. துளசி செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும், 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுவதாக ஒரு தகவலும் இந்த கட்டுரைகளிலும், வாட்சாப் ஃபார்வார்டுகளிலும் பரப்பப்படுகிறது. உண்மையில் துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா? உண்மையாகவே ஒரு தாவரம் ஓசோன் வாயுவை வெளியிடுவதாக வைத்துக்கொண்டால்கூட அந்த வாயு புவியில் சுற்றுச் சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் நல்லதா என்பதை இந்தக் கட்டுரையில் ஆராய்வோம். அதற்கு முன்னதாக துளசி, ஓசோன் இரண்டின் பின்னணியையும் பார்ப்போம். துளசி - மருத்துவமும், நம்பிக்கையும் துளச...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.