Skip to main content

Posts

Showing posts with the label 6 graha

தனுசுவில் சனி, குரு கேது கூடவே சூரியன், சந்திரன் புதன் - டிசம்பர் 25ல் என்ன நடக்கும்

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25 முதல் 27 ஆம் தேதி வரை ஜோதிடவியலில் மிக முக்கியமான சம்பவம் நிகழப்போகிறது. அதாவது தனுசு ராசியில் ஏற்கனவே சனி, கேது கிரகங்கள் இணைந்துள்ளன. நவம்பர் முதல் குரு தனுசு ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். கூடவே டிசம்பர் மாதம் சூரியன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்து மொத்தம் ஆறு கிரகங்கள் இணைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வரும் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம். நவகிரகங்கள் 12 ராசியில் ஏதாவது ஒரு மாதத்தில் சஞ்சரிக்கின்றன. சந்திரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் சூரியன் மாதம் ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கின்றன. குரு ஆண்டுக்கு ஒருமுறையும், சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ராகு கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த ஆண்டு இறுதி வரை தனுசு ராசியில் சனி, கேது, குரு சஞ்சரிக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் ராஜகிரகங்கள் சூரியன், சந்திரன், புதன் தனுசுவில் இணையப்போகின்றன. இதனால் பூமியில் ஏதேனும் ஆபத்து நடக்குமோ, சுனாமி போன்ற பாதிப்பு எதுவும் ஏற்படுமோ...