ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று தாகம் தீர்க்கும் பானம் இருக்கிறதா என விசாரித்தபோது, மூலிகை மோர், மூலிகை தேநீர் என எல்லாம் மூலிகை மயமாக இருந்தது. எல்லாம் விலை ஐந்து ரூபாய் என்பது மற்றொரு ஆச்சர்யம். உள்ளே உணவகத்தினுள் சென்றால் சாப்பாடு, ஆவாரம்பூ சாம்பார், முடக்கத்தான் ரசம், மூலிகை மோர் எனப் பட்டியலும் மூலிகை மயமாக காட்சியளித்தது. மதிய சாப்பாடு 15 ரூபாய்தான் என்பது இன்னும் ஆச்சர்யம். சென்னையில் குறைந்தது 50 ரூபாயாவது இருந்தால் மட்டுமே பசியாற முடியும் என்ற நிலை இருக்கும்போது இது சாத்தியமா என்ற எண்ணம் வரவே மூலிகை உணவகத்தின் பணம் வசூலிக்கும் மேலாளரிடம் விசாரித்தோம். அவர் "எங்க கடையோட ஓனர்கிட்ட கேளுங்க" என்று அவரின் செல்போன் எண்ணைக் கொடுத்தார். மூலிகை உணவகம் உணவகத்தின் முன்னதாக தேநீர் கடை, மூலிகைப்பொடி விற்கும் பிரிவ...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.