Skip to main content

Posts

Showing posts with the label Schools Holiday Extended

அரசு பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறப்பு: பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 4ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி வரும் 3ஆம் தேதி திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும் நிலையில், நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம் என்பதால், மேலும் ஒரு நாள் விடுப்பு வழங்க ஆசிரியர் சங்கத்தினர் பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று விடுமுறையை மேலும் ஒரு நாள் நீட்டித்துப் பள்ளிகளை ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.