செலவோ குறைவு...தரமோ நிறைவு... ஆற்றுமணல், செங்கல் இல்லாமல் இயற்கையான ஆர்கானிக் வீடுகள்: பழமையுடன் புதுமை கலந்து அசத்தும் தம்பதிகள்
செலவோ குறைவு...தரமோ நிறைவு... ஆற்றுமணல், செங்கல் இல்லாமல் இயற்கையான ஆர்கானிக் வீடுகள்: பழமையுடன் புதுமை கலந்து அசத்தும் தம்பதிகள் சேலம்: இயந்திர மயமான இன்றைய வாழ்க்கைச்சூழலில் மனிதர்களின் தேவைகளுக்கான ஓட்டமும் இயந்திரங்களை போலவே உள்ளது. பசியை போக்க பாஸ்ட் புட் உணவுகளை உண்டு, வெளிச்சம் இல்லாத அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசித்து, தனது உடலுக்கு தானே தீங்கு ஏற்படுத்திக் கொண்டு, அதற்கான நிவாரணத்தை தேடி அலைவதும் வாடிக்கையாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் மனிதர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும், அவற்றால் நிகழும் சமூக இடர்பாடுகளுக்கும் வசிக்கும் இல்லமே காரணம். இதை சரிப்படுத்தி விட்டால் மகிழ்ச்சியே நிலைக்கும் என்கின்றனர் இயற்கைக்கு மாசு விளைவிக்காத ஆர்கானிக் வீடுகளை அமைத்து அசத்தி வரும் ஆர்கிடெக் தம்பதிகள். சேலம் மாவட்டத்தின் இயற்கை எழில் சூழ்ந்த ஏற்காட்டில் சமீபகாலமாக கட்டப்பட்டு வரும் வீடுகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஆற்றுமணல், செங்கல் பயன்படுத்தாமல் கட்டப்பட்டு வரும் இந்த வீடுகள், பழமை மாறாமல் புதுமையை கொண்டு சேர்க்கும் கட்டிடக...