Skip to main content

Posts

Showing posts with the label Buses Running

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

தமிழக அரசு அதிரடி!!

பேருந்துகளில் நூறு சதவீத பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய் பரவல் தன்மைக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் அனைத்து இருக்கைகளையும் நிரப்பக்கூடாது என்றும், 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என அரசு கூறியிருந்தது. அரசு பேருந்துகளை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளும் 50% பயணிகளுடன் இயக்க அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் பேருந்து பயணிகள் கட்டுப்பாட்டில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பேருந்தில் 100% பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கல்லூரி வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் நலன் கருதி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  அதே போல் வைரஸ் பரவலும் குறைந்து வருவதால் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.