Skip to main content

Posts

Showing posts with the label marriage advice

திருமணம் செஞ்சிகிட்டா இரண்டரை லட்சம் பரிசு; மாநில அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

மாநில அரசு அளிக்கும் நிதி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா  மாநிலத்தில் முதல்வர்  நவீன் பட்நாயக்  தலைமையிலான  பிஜு ஜனதா தள்  கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஒடிசாவின் மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 658  கலப்பு திருமணங்கள்  ஒடிசாவில் நிகழ்ந்துள்ளன. எனவே கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் வகையில் மாநில அரசு சன்மானம்  வழங்கி வருகின்றது. முன்னதாக ரூ.1 லட்சம் என்றிருந்த இந்தத் தொகை, தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.50,000ல் இருந்து ரூ.1 லட்சமாக கலப்பு திருமணத்திற்கான சன்மானம் உயர்த்தப்பட்டது. இதற்காக  Sumangal.odisha.gov.in  என்ற பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது எஸ்.டி மற்றும் எஸ்.சி மேம்பாடு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திர...