Affiliate Marketing என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? - What is Affiliate Marketing? How to earn from affiliate marketing?
Affiliate Marketing ஆனது ஆன்லைனில் மிகவும் அதிகமாக பணம் சம்பாதிக்க கூடிய வழிகளில் ஒன்று. Affiliate marketing பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவின் மூலம் அதிக வருமானம் தரக்கூடிய பிரபலமான முறையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். Affiliate Marketing என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? Affiliate marketing ஆனது மிகப் பழமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகளில் ஒன்று. ஒரு நிறுவனம் அவர்களது பொருட்களை ஆன்லைனில் விற்கும் பொழுது அதனை உங்களின் மூலமாக வேறொருவருக்கு விற்றால் அதற்கான ஒரு பங்கு (கமிஷன்) உங்களுக்கு கிடைக்கும். இந்த பங்கானது 10 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும் படியாக இருக்கும். அது நீங்கள் விற்பனை செய்து கொடுக்கும் பொருளை பொருத்தது. ஒரு பொருளை விற்றால் அதன் பங்காக பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதே பொருளை 10 பேருக்கு விற்றால் 100 ரூபாய் வரைக்கும் உங்களுக்கு கிடைக்கும். Affiliate marketing ஆனது கீழ்க்கண்ட நான்கு வழிகளின் மூலமாக எப்படி நடக்கிறது என்பதை அறியலாம். 1. முதலில் ஏதாவது ஒரு Affiliate program - ல்...