Skip to main content

Posts

Showing posts with the label 2000 note

இனி ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுக்கள் வராது!

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுகள் இனி ஏடிஎம் இயந்திரங்களில் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பு நடவடிக்கை அமலானது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.  TO SHOP VMART VISIT HERE ஆனால், 2000 ரூபாய் நோட்டுகள் வந்தபிறகு கள்ள நோட்டுப் புழக்கமும், கருப்புப் பணமும் இன்னும் அதிகரித்துவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2000 நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல தான் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில்2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி முடிவுசெய்திருப்பதாகவும், இதனால் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்க...