ஆரோக்கியமான உணவுகள் என்று ஆய்வுகளே சொல்லகூடியவை நம் பாரம்பரியமான உணவுகள் தான். அப்படியான உணவில் சிறுதானியங்களுக்கு தனி இடம் உண்டு. முந்தைய தலைமுறைகளின் ஆரோக்கியத்தில் சிறு தானியங்களுக்கும் பங்குண்டு.
அரிசியின் அளவைவிட சிறியதாக இருக்கும் இந்த சிறுதானியங்கள் குறுகிய காலத்தில் வளரகூடிய பயிர் ஆகும். ஒவ்வொரு சிறுதானியமும் தனித்துவமான மணங்களையும் சுவைகளையும் கொண்டிருக்கிறது. உணவே மருந்து என்பதற்கு நல்ல உதாரணம் சிறுதானியங்கள் என்று சொல்லலாம்.
சிறுதானியங்கள் வெள்ளை, சாம்பல், மஞ்சள், சிவப்பு நிறங்களில் உள்ளது. இது உடலுக்கு தேவையான வைட்டமின் பி யின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தின் முழு அடக்கமாகவே சிறுதானியங்கள் விளங்குகிறது. உடலில் ரத்த அணுக்களின் உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தும், காப்பரும் இதில் உள்ளது.
இதிலிருக்கும் பாஸ்பரஸ் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செய்கிறது. தாவரங்களில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நோய்களுக்கு எதிரான குணங்களை கொண்டிருக்கிறது. இது புற்றுநோய்க்கும் எதிராக செயல்படகூடிய குணத்தை கொண்டிருக்கிறது. ரத்த சோகை வராமல் தடுக்க சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். இது கால்சியத்தையும் நிறைவாக கொண்டிருப்பதால் எலும்புகளை வலிமையாக வைத்திருக்கிறது.
சிறுதானியங்கள் உடலில் இருக்கும் டிரை கிளிசரைடுகளின் அளவை குறைக்க செய்கிறது. மேலும் உடலில் ரத்த அணுக்களை தடிமனாக ஆக்குவதை தடுப்பதால் கரோனரி தமனி கோளாறுகள் உருவாவதை தடுக்கசெய்கிறது. சிறுதானியங்களில் இருக்கும் வைட்டமின் பி கொழுப்பையும் கார்போ ஹைட்ரேட்டுகளையு உடைக்க கூடியவை. இதனால் கொழுப்பு கட்டிகள் உடலில் சேர்வதில்லை. அதோடு நிறைவுற்ற கொழுப்புகள் இதில் இல்லை.
பொதுவாக தாவர உணவுகளை காட்டிலும் இறைச்சி வகைகளில் தான் அதிகம் புரதம் உள்ளது என்று சொல்வார்கள். ஆனால் சிறுதானியங்களில் அதிக அளவு புரதம் எளிதாக கிடைக்கிறது. கோதுமை போன்ற புரதக்கூட்டமைப்பு கொண்டிருந்தாலும் சிறு தானியங்களில் பசையம் போன்ற ஒட்டும் தன்மை பொருள் இல்லை என்பதால் இது செரிமானத்தை சீராக்கவும் செய்கிறது.
அரிசி உணவுக உடல் எடையை அதிகரிக்க கூடும் ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் சிறு தானியங்கள் மீது கவனம் செலுத்தலாம். இதில் டிரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது பசியை கட்டுப்படுத்த கூடும். செரிமானத்தை பொறுமை ஆக்கும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது பசி உணர்வை உண்டாக்காது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க விரும்பினால் நீங்கள் சிறுதானியத்தை தினசரி உணவில் சேர்க்கலாம்.
சிறுதானியங்களில் மெக்னீசியம் உள்ளது. இது தமனியின் உட்சுவர்களை தளர்த்துவதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. ஆஸ்துமா, மைக்ரேன் என்னும் ஒற்றைத்தலைவலியை கட்டுக்குள் வைக்கவும் செய்கிறது.
சிறுதானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டவை. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு ஆகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் நிலையாக வைத்திருக்க சிறுதானியம் உதவுகிறது. சிறுதானியங்கள் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க செய்கிறது. நீரிழிவு இருப்பவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது போன்று இதை அடிக்கடி சேர்ப்பதன் மூலம் நீரிழிவு வராமல் தடுக்கலாம்.
பித்தப்பை கற்கள் வராமல் இருக்க நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் உதவும். குடல்களில் உணவு வேகமாக செல்வதை நார்ச்சத்து உணவுகள் தவிர்க்கிறது. பித்த அமிலங்கள் சுரப்பை நார்ச்சத்து உணவுகள் கட்டுப்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து எடுத்துகொண்டவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் 13% குறைவான கற்கள் உருவானது கண்டறியப்பட்டது

சிறுதானியங்களில் இருக்கும் ட்ரிப்ரோபன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தூக்கமின்மையால் அவதி படுபவர்கள் இரவு நேரத்தில் சிறுதானியங்கள் சேர்த்துகொள்வது பலன் அளிக்கும். சிறுதானியங்களில் மெக்னீசியம் அளவும் அதிகம் என்பதால் பெண்கள் இதை அடிக்கடி சேர்க்கும் போது மாதவிடாய் உபாதை குறையக்கூடும். சிறுதானியங்களில் பாஸ்பரஸ் சத்தும் அதிகம் உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கப் சிறுதானியம் பாஸ்பரஸ் தேவையின் 17% கொடுத்துவிடுகிறது.
சிறுதானியங்கள் புரதம் மிகுந்தவை என்பதால் இது தசைகளின் குறைபாட்டை தடுத்து தசைகள் வலுப்படவும் செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக சிறுதானியத்தை ஏன் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொண்டீர்களா?
Comments
Post a Comment