மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.
தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.
Comments
Post a Comment