8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறப்பு மாணவர்கள் சட்டத்தை மீறினால் கைது: போலீஸ் கடும் எச்சரிக்கை
சென்னை: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன.
தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக இன்று முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
கல்லூரிகளுக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் 'ரூட் தல' மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக ஆட்டம் பாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.
கடந்தாண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் 'ரூட் தல' பிரச்னையில் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாநகர பேருந்தை வழிமறித்து பட்டாக்கத்தியால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க மாநகர காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி, புதுக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே யார் 'ரூட் தல' என்ற போட்டியில் அடிக்கடி நடுரோட்டில் மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
தற்போது, 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கல்லூரிகளும் இன்று திறக்கப்பட உள்ளதால், ரூட் தல பிரச்னை நடைபெற அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீசார் மாநகர காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 12 காவல் மாவட்டங்களில் உள்ள துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் போலீசார் அனைத்து மாநகர பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், அனைத்து கல்லூரிகள் முன்பும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் எச்சரிக்கையை மீறி இறுதி ஆண்டு மாணவர்கள் இன்று 'ரூட் தல' பிரச்னையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு, கைது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
school kab open honge,when school open,school kab open hoga,school reopen kab honge,school reopen 2020,school reopen date,school reopen latest news,school re open,college kab khulega,college reopen date 2020,tn college reopen,school college coaching kb tk khulenge,college open date 2020,college reopen date 2020 today news,college reopen date 2020 polimer news,college reopen date 2020 in tamil nadu latest news,college reopen date 2020 in tamil,degree college open date,college open in karnataka


Comments
Post a Comment