Skip to main content

இந்திய ரிசர்வ் வங்கியில் 926 உதவியாளர் பணியிடங்கள்... பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

1935-ல் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1949-ல் இந்திய அரசால் நாட்டுடமையாக்கப்பட்டது. மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது. நாடு முழுவதுமுள்ள இந்த வங்கியின் கிளைகளில் 926 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.



காலியிடங்கள்:

அகமதாபாத் - 19,

பெங்களூரு - 21,

போபால் - 42,

புவனேஸ்வர் - 28,

சண்டிகர் - 35,

சென்னை - 67,

கவுகாத்தி - 55,

ஐதராபாத் - 25,

ஜெய்பூர் - 37,

ஜம்மு - 13,

கான்பூர் மற்றும் லக்னோ - 63,

கொல்கத்தா - 11,

மும்பை - 419,

நாக்பூர் - 13,

புதுடெல்லி -34,

பாட்னா - 24,

திருவனந்தபுரம் மற்றும் கொச்சி - 20 என்று மொத்தம் 926 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
பொது - 473, எஸ்சி - 98, எஸ்டி - 80, ஓபிசி - 192, ஈடபிள்யூஎஸ் - 83 என்று இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 50 சதவிகிதத்திற்கு மேலான மதிப்பெண்ணுடன் ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர், தேர்ச்சிபெற்றிருந்தால் போதுமானது. கூடுதலாக, கணினியில் சொல் செயலாக்கத் திறன் (knowledge of word processing on PC) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-12-2019 அன்று 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்கவேண்டும். அதாவது, 2-12-1991 முதல் 1-12-1999 வரையான காலத்தில் பிறந்திருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி - 5, ஓபிசி - 3, மாற்றுத்திறனாளிகள் - 10, கணவனை இழந்தவர், விவாகரத்து பெற்றவர் மற்றும் மறுமணம் செய்துகொள்ளாமல் சட்டப்படி கணவரைவிட்டுப் பிரிந்து வாழ்பவர்கள் - 10, ஜம்மு & காஷ்மீரில் 1-1-1980 முதல் 31-12-1989 வரை சாதாரணமாகக் குடியிருந்து வந்தவர்கள் - 5 ஆண்டுகள் என்று வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் 16-1-2020.
விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in எனும் இணையதளத்தில் `Recruitment for the post of Assistant' எனும் இணையப் பக்கத்துக்குச் சென்று, பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி. எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (PWD) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (EXS) தகவல் தெரிவித்தல் கட்டணமாக 50 ரூபாயும், மற்றவர்கள் தேர்வுக் கட்டணம் மற்றும் தகவல் தெரிவித்தல் கட்டணாமாக 450 ரூபாயும் இணைய வழியில் செலுத்தவேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 16-1-2020.

தேர்வு முறை:

விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) மற்றும் முதன்மைத் தேர்வு (Main Examination) என்று இருவகையான இணையவழித் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கில மொழி, எண் திறன் மற்றும் பகுத்தறிவுத் திறன் (Reasoning Ability) எனும் மூன்று வகையான பிரிவுகளிலும் மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கும் முதன்மைத் தேர்வில் பகுத்தறிவுத் தேர்வு (Test of Reasoning), ஆங்கில மொழித்தேர்வு, எண் திறன் தேர்வு (Test of Numerical Ability), பொது விழிப்புணர்வுத் தேர்வு (Test of General Awareness), கணினி அறிவுத் தேர்வு எனும் ஐந்து பிரிவுகளில் 200 மதிப்பெண்ணுக்கும் தேர்வு எழுத வேண்டும். இரு தேர்வுகளிலும் வெற்றிபெற்றவர்களுக்கு, அலுவலகத்துக்கேற்ப மொழிப் புலமைத் தேர்வு (Language Proficiency Test) நடத்தப்படும். பின்னர் பணியிடம் வழங்கப்படும்.

தேர்வு மையங்கள்:

இந்தத் தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் என்று 8 இடங்களிலும், முதன்மைத் தேர்வுக்கு சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் என்று 5 இடங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. புதுச்சேரியில் இரு தேர்வுகளையும் எழுதமுடியும்.

தேர்வு நாள்:

முதல்நிலைத் தேர்வு 14-2-2020 மற்றும் 15-2-2020 ஆகிய இரு நாள்களில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மையத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில் தேர்வினை எழுதலாம். தேர்வுக்கான முடிவுகள் பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்திலோ, மார்ச் முதல் வாரத்திலோ வெளியிடப்படும்.

அதன்பிறகு, முதல்நிலைத் தேர்வில் தேர்வுபெற்றவர்கள் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் முதன்மைத் தேர்வில் கலந்துகொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட மையத்தில் தேர்வினை எழுதலாம். பிறகு, அலுவலகத்துக்கேற்ற மொழிப்புலமைத் தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெற வேண்டும்.

இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பணியிட ஆணை வழங்கப்படும்.

கூடுதல் தகவல்கள்:

தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.rbi.org.in எனும் இணையதளத்தினைப் பார்வையிடலாம். விண்ணப்பப் படிவம் நிரப்புவதில் சிக்கல், பணம் செலுத்துவதில் ஏற்படும் இடையூறுகள், அழைப்புக் கடிதம் கிடைக்காமலிருத்தல் போன்ற தொடர்புகளுக்கு http://cgrs.ibps.in/ எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Comments

Popular posts from this blog

insect in child anus Pinworm infection

  Pinworm infection Pinworm infection is the most common type of intestinal worm infection in the United States and one of the most common worldwide. Pinworms are thin and white, measuring about 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. Image Source - Mayo clinic  Pinworm An adult pinworm generally is 1/4 to 1/2 inch (about 6 to 13 millimeters) in length. The most common symptom of infection is anal itching, particularly at night, as worms migrate to the host's anal area to lay their eggs. While the infected person sleeps, female pinworms lay thousands of eggs in the folds of skin surrounding the anus. Most people infected with pinworms have no symptoms, but some people experience anal itching and restless sleep. Pinworm infection occurs most often in school-age children, and the tiny (microscopic) eggs are easily spread from child to child. Treatment involves oral drugs that kill the pinworms and thorough washing of pajamas, bedding and underwear. For...

SURIYA - PHOTOS

Home   >  Photos & Stills  >  Tamil Personality Photos & Stills  >  Suriya Photos & Stills   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya \   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya   Suriya ...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...