தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும் மனிதர்களின் மூளையும், மனதும் அமைதியாய் இருக்கும் ஒரே நேரம் இரவு தூங்கும் போதுதான். தூங்கும் நேரத்தில் ஏற்படும் பிரச்சினை என்றால் அது குறட்டை விடுவதுதான். கிட்டதட்ட அனைவருமே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் இது மட்டுமின்றி அருகில் இருப்பவர்களின் தூக்கத்தை கெடுக்கும் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. அதுதான் தூக்கத்தில் பேசுவது. குறட்டை விடுவது அளவிற்கு இது பொதுவான பிரச்சனையாக இல்லையென்றாலும் இப்பொழுது இளைஞர்களிடையே இது அதிகம் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக பணிச்சுமை மற்றும் அளவில்லாத இன்டர்நெட் உபயோகமும்தான். இந்த பதிவில் தூக்கத்தில் பேச காரணம் என்ன என்பதையும், அதனை தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம். தூக்கத்தில் பேசுதல் தூக்கத்தில் பேசுவது என்பது சம்மிலாக் என அழைக்கப்படும் பராசோமனியாவின் ஒருவகையாகும். தூக்கத்தில் செய்யும் அசாதரண செயல் என்பது இதன் பொருள். மனஅழுத்தம், சோர்வு, மதுப்பழக்கம், தூக்கமின்மை என இது ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இது மட்டுமின்றி மரபணு மூலமாகவும் இந்த பிரச்ச...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.