உங்கள் ராசியை பொருத்து உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார் தெரியுமா?
Posted By Arun Sajan
அனைவருக்குமே தங்களின் வருங்கால வாழ்க்கைத்துணை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமிருக்கும். வீட்டில் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே முதலில் வெளிவரும் வார்த்தை ஜாதகம்தான். ஏனெனில் ஒருவரின் குணநலன்கள் மற்றும் பண்புகள் ஜாதகத்தின் அடிப்படையிலேயே தீர்மனிக்கப்படும் நம்பிக்கை இன்றும் நிலவி வருகிறது. இது காதல் திருமணங்களுக்கும் பொருந்தும்
ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் ஜாதகத்தின் 7 ஆம் ஸ்தானம் உங்கள் வாழ்க்கைத்துணையை பற்றி கூறுகிறது. 7ஆம் ஸ்தானத்தை பொருத்தே வாழ்க்கைத்துணையின் குணம் மற்றும் ஆளுமை எப்படி இருக்கும் என்பது கணிக்கப்பட்டு இருவருக்கும் எத்தனை பொருத்தம் உள்ளது என்பது தீர்மானிக்கப்படுகிறது. உங்களின் ராசியும் உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்கள் என்பதை கணிக்கும். உங்கள் ராசிக்கு உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
மேஷம் மேஷ ராசி அதிஷ்டசாலிகளே உங்கள் வாழ்க்கைத்துணையை சமாளிப்பது மிகவும் எளிதாக இருக்கும், அவர்கள் பழகுவதற்கு இனிமையாகவும் எளிதில் உறவுகளை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள். வரவு மற்றும் செலவுகளை நன்கு சமாளிக்க கூடியவராக இருப்பார். அவர்களின் தோற்றம் அழகாக இருக்கும், ஆடம்பர பொருட்களை விரும்புபவர்களாக இருப்பார்கள் மற்றும் கலையில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார்கள்
ரிஷபம்
உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை சற்று சதைப்பிடிப்புடன் இருப்பார். சற்று கோபக்கார அதேசமயம் பழகுவதற்கு மிகவும் இனிமையானவராக இருப்பார்கள். ஒரு முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்கமாட்டார்கள். பொதுவாக இவர்கள் அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். பெரும்பாலும் இவர்கள் தொழில் முனைவராகவோ அல்லது விளையாட்டு துறையிலோ இருப்பார்கள்.
மிதுனம்
உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை எப்பொழுதும் உற்சாக மனநிலையுடன் காணப்படுவர், தெய்வ பக்தி நிறைந்தவராக இருப்பார். வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயனப்டுத்திக்கொள்வர் அதேசமயம் முடிவெடுப்பதில் குழம்புபவர்களாகவும் இருப்பார்கள். அறிவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வமுடையவராக இருப்பார்கள், தங்கள் எண்ணங்களை உடனடியாக வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள். அவர்கள் சட்டம் அல்லது மீடியாவை சேர்ந்தவராக இருப்பார்கள்.
கடகம்
உங்கள் வாழ்க்கைத்துணை மிகவும் பணிவானவர்களாகவும், அனுசரித்து செல்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற சிறந்த குணங்களை பெற்றிருப்பார்கள். பொறுமையாய் இருந்து வெற்றிக்கனியை பறிக்க கூடியவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பாளர்களாகவும், பயணத்தை விரும்புவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தொழிற்சாலை தொடர்பான பணியில் இருப்பார்கள்.
சிம்மம்
உங்கள் வாழ்க்கைத்துணை நடுத்தர உயரத்துடன், நிறம் குறைவாக இருந்தாலும் தத்துவ அறிவு அதிகம் உள்ளவராக இருப்பார். அவர்கள் மிகவும் எளிமையான அதேசமயம் பிரபலமானவராக இருப்பார்கள். எழுத்து அல்லது கற்பித்தல் துறையில் பணிபுரிபவராக இருப்பார்கள்
கன்னி
உங்கள் வாழ்க்கைத்துணைக்கு இயற்கையாகவே தெய்வபக்தி அதிகம் இருக்கும். சுறுசுறுப்பானவராகவும் உலகவிஷயங்களில் அதிக ஆர்வம் உள்ளவராகவும் கருத்தியலராகவும் இருப்பார்கள். மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவராகவும் சினிமா, நடனம் போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவராகவும் இருப்பார்கள். அவர்கள் கலைத்துறை அல்லது மனநலன் தொடர்பான துறைகளில் பணிபுரிபவராக இருப்பார்.
துலாம்
உங்கள் வாழ்க்கைத்துணை சிறந்த ஆளுமை உடையவராக இருப்பார், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமாகவும், தைரியசாலியாகவும் இருப்பார். எப்பொழுதும் உற்சாகமாக இருப்பதுடன் பயணம் மேற்கொள்ள ஆர்வமாய் இருப்பார். அவர்களுக்கு வெளியுலக தொடர்பு அதிகம் இருக்கும்.
விருச்சிகம்
உங்கள் வாழ்க்கைத்துணை மிகவும் தைரியசாலியாக இருப்பார் மேலும் நற்குணங்கள் நிறைந்தவராக இருப்பார். அழகாகவும், வசீகரிக்க கூடியவராகவும் இருப்பார். அவர்கள் இயற்கையில் கடினமானவர்களாக இருப்பார்கள், பொறுமையுடன் எந்த வேலையையும் செய்துமுடிப்பார்கள். குறிப்பாக பிரபலமானவராக இருப்பார்கள்.
தனுசு
உங்கள் வாழ்க்கைத்துணை பொதுவாக செல்வந்தராகவும், பரந்த மனப்பான்மை மற்றும் நல்ல பகுப்பாய்வு திறனைக் கொண்டவராக இருப்பார். எந்த வேலையாக இருந்தாலும் அதனை திறமையாக செய்பவராக இருப்பார். அவர்கள் தெளிவான மனம், நிறம் மற்றும் நல்ல கல்வி தகுதி உடையவராக இருப்பார்கள். பெரும்பாலும் அறிவியல் துறையில் பணி செய்பவராக இருப்பார்கள்.
மகரம்
உங்கள் வாழ்க்கைத்துணை மிகவும் பாசக்காரராகவும், எளிமையான, அதிக புத்திசாலிதனத்துடனும் இருப்பார். மிதமான உடலமைப்புடன் அழகாக காட்சியளிப்பவராக இருப்பார். அவர்கள் ஹோட்டல் அல்லது உணவு தொடர்பான பணியில் இருப்பார்கள்.
கும்பம்
உங்கள் வாழ்க்கைத்துணை ஆதிக்கம் செலுத்தக்கூடியவராக இருப்பார், ஒழுக்கமான மற்றும் சிறப்பான பேச்சாற்றல் உள்ளவராக இருப்பார். இவர்கள் ஆள்வதற்கு பிறந்தவர்கள் எனவே அவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது இயலாதது. இவர்கள் அரசு துறைகளில் பணிபுரிபவராக இருப்பார்கள்.
மீனம்
உங்கள் வாழ்க்கைத்துணை சிறந்த குணநலன்களுடன் இருப்பார்கள். வாழ்வில் பல ஏற்ற, இறக்கங்களை பார்த்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் தந்திரமாக செயல்களில் வெற்றியடைய கூடியவர்கள். தங்கள் துணையை விட இளமையானவராக காட்சியளிப்பார்கள்
#Rasi #Marraige #Share

Comments
Post a Comment