Skip to main content

வாட்ஸ் அப், பேஸ்புக்கில் காதலை சொன்னால் பெண்களுக்கு உங்களை பிடிக்குமா ?

 

வாட்ஸ்அப், பேஸ்புக்கில் காதலை சொன்னால் பெண்களுக்கு உங்களை பிடிக்குமா?...


ஒரு பெண்ணுடன் நீண்ட வருடங்களாக நட்புடன் பழகி வந்திருக்கலாம். இறுதியாக உங்கள் மனதில் எப்போதும் போல் ஒரு கேள்வி எழும். அவள் ஏன் எனக்கு மனைவியாக வரக் கூடாது? ஆம், இந்த கேள்வி மனதில் உதித்தவுடன், இதை எப்படியாவது அவளிடம் சொல்ல வேண்டும் என்று மனம் துடிக்கும். ஆனால் எப்படி சொல்வது? பழைய காலம் போல் புறாவை தூது அனுப்ப முடியுமா? இல்ல, கடிதம் மூலம் தெரிவிக்கலாமா? அல்லது வாட்சப்பில் மெசேஜ் அனுப்பலாமா? ஏன் இதற்கெல்லாம் கவலை. இருக்கவே இருக்கிறது இன்றைய சமூக ஊடகங்கள். இவற்றின் வழியாக உங்கள் காதலை சொல்லலாம். ஆனால் மிகவும் கடினமாக, இல்லாமல் மிகுந்த இயல்பாக உங்கள் காதலை அவரிடம் வெளிப்படுத்த முயற்சிக்கலாம்.

relationship in tamil


சமூக ஊடகம் வழியாக உங்கள் காதலை சொல்வதற்கான வழிகளைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு முயற்சியுங்கள்.
வீடியோ அனுப்புங்கள்


வீடியோ அனுப்புங்கள்

உங்கள் வாழ்க்கையை சிறப்பாகச் செய்யும் ஒருவருக்காக ஒரு சிறந்த வீடியோவை தயாரியுங்கள். வெறும் ஒரு குறுஞ்செய்தியாக நான் உன்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன் என்ற வார்த்தைகள் நல்ல பலனைக் கொடுக்காமல் போகலாம். 


நீங்கள் அவருடன் இருக்கும் நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தும் விதத்தில் ஒரு அழகான வீடியோவை உருவாக்குங்கள். நீங்கள் அவரை மிகவும் நேசிக்கிறீர்கள், அவருடன் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்புகிறீர்கள் என்பதை தனிப்பட்ட முறையில் அவருக்கு உணர்த்தும் விதத்தில் இந்த விடியோவை உருவாக்குங்கள். அந்த வீடியோவில் நீங்கள் அவரை விரும்புவதை குறிப்பிடுங்கள். 


உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை உணர்த்துங்கள். நீங்கள் அவருடன் இருப்பதை எந்த அளவிற்கு விரும்புகிறீர்கள் என்பதை அவருக்கு கூறுங்கள். உங்கள் காதலின் ஆழத்தை அவருக்கு புரிய வையுங்கள். உங்கள் இருவரின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் நகைச்சுவையாகவோ அல்லது இசை மூலமாகவோ உங்கள் காதலை அவருக்கு வெளிபடுத்துங்கள். நீங்கள் அவருடன் இருக்கும் நேரம் எவ்வளவு அழகானது என்பதை உணர்த்துங்கள். அவர் உங்கள் காதலை ஏற்றுக் கொள்ளும் வகையில் எல்லா நேர்மறை எண்ணங்களோடும் இந்த வீடியோவை தயாரியுங்கள்.


சொந்தமாக ஒரு பாடலை உருவாக்குங்கள்.

சொந்தமாக ஒரு பாடலை உருவாக்குங்கள்.

நீங்கள் ஒரு இசைக்கலைஞரா ?ஆம் என்றால், உங்கள் காதலிக்கு ஒரு பாடலை பதிவு செய்து சமூக ஊடகத்தில் போஸ்ட் செய்யலாம். இந்த பாடலை அவருடைய தனிப்பட்ட கணக்கிற்கு அனுப்பி, அவரை நீங்கள் விரும்புவதையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பதையும் அவருக்கு தெரிவியுங்கள். ஒரு வேளை இந்த பாடல் வைரல் ஆவதால், நீங்கள் இன்னும் மகிழ்ச்சி அடையலாம். இதன் மூலம் உங்கள் காதலி மீது நீங்கள் கொண்டுள்ள காதலின் ஆழத்தை உலகில் உள்ள அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

எது சரியான நேரம்?


எது சரியான நேரம்?

மேலே கூறிய முறைகள் அனைத்தும் ஒரு [பெண்ணிடம் காதலைக் கூற சிறப்பான யோசனையாகும். ஆனால் எந்த நேரத்தில் உங்கள் காதலை அறிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உங்கள் காதலை தெரியப்படுத்த வேண்டும். உங்கள் காதலியின் சௌகரியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் அவருடன் எப்போதும் இருப்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவரை நேரில் காண முடியாத தருணங்களில் சமூக ஊடகம் மூலம் அவரைப் பின்தொடர்வதால் உங்கள் அருகாமை அவருக்கு இருப்பதாக அவருக்கு தோன்றச் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் நெருக்கம் மேலும் அதிகரிக்கலாம். மேலும் அவருக்கு சில சிறந்த செய்திகளை சமூக ஊடகம் மூலம் பரிமாறலாம்.

ஓவியத்தை உருவாக்கலாம்

ஓவியத்தை உருவாக்கலாம் 

ஆன்லைன் மூலம் சில அழகான ஓவியத்தை உருவாக்கலாம். ஒரு அழகான ஓவியம் மூலம் உங்கள் காதலை வெளிபடுத்துவது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத உணர்வைத் தரும். காதல் உறுதியானவுடன் இதே ஓவியத்தை அவருக்கு நிஜமாகவே பரிசளிக்கலாம். இதற்காக ஓவியரிடம் கூட ஆலோசனைக் கேட்கலாம். உங்கள் ஓவியத்திற்கு ஏற்ற அழகான வாசகங்களை எழுதி அதனுடன் இணைக்கலாம். இது உங்கள் காதலிக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும் ஒரு அன்பளிப்பாக இருக்கலாம்.

ப்ரைவேட் சாட்

ப்ரைவேட் சாட்

சமூக ஊடகத்தில் ப்ரைவேட் சாட்டிங்கிற்கு அவரை அழைக்கலாம். இதன்மூலம் நீங்கள் அனுப்பும் செய்தியை அவர் மட்டும் படிக்க முடியும். இது அவருக்கும் பொருந்தும். அவரின் சந்தோசம் இதில் மிக முக்கியம் என்பதால் இருவரும் தனிப்பட்ட கருத்துகளை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் உங்கள் காதலை அவருக்கு எளிதில் புரிய வைக்கவும் முடியும்.


வெளியிடம்


வெளியிடம்

உங்கள் காதலியை ஒரு சமூக ஊடக நிகழ்ச்சிக்கு வருவதற்கு அழைப்பு விடுங்கள். பேஸ் புக் வழியாக உங்கள் காதலை சொல்ல, பேஸ்புக்கில் நீங்கள் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அவரை வரவழையுங்கள் . இதற்கு ஒரு தனிப்பட்ட அர்த்தம் மற்றும் மதிப்பு இருப்பதை அவருக்கு உணர்த்துங்கள். அவர் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் எதாவது செய்ய விரும்புகிறீர்கள் என்பது அவருக்கு புரியும். நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். மேலே கூறிய எல்லா குறிப்புகளும் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை அழகாக உணர்த்தும். உங்கள் முயற்சிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் சிறப்பான காதலை அவர் ஏற்றுக் கொள்ள எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

POSTED BY  ArunSajan SHARE WITH YOUR FRIENDS 

Tags: #LOVE #PROPOSE #WHATSAPP #FACEBOOK


Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.