Skip to main content

Posts

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

  இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும். இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட  Buyhatke  என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிக...

Sri Swetharanyeswarar temple – Thiruvenkadu

  இறைவன்  : சுவேதாரண்யேசுவரர் , நடராஜர் , அகோரமூர்த்தி இறைவி  : பிரமவித்யாநாயகி , துர்க்கை , காளி தல தீர்த்தம்  : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் ,அக்னி தீர்த்தம் தல விருட்சம்  : வட ஆலமரம் , கொன்றை , வில்வம்  வழிபட்டோர்  : பிரம்மா , இந்திரன் , வெள்ளையானை புராண பெயர்  : ஆதி சிதம்பரம் , திருவெண்காடு ஊர்  : திருவெண்காடு மாவட்டம் :  நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர்  – 1. கண்காட்டு நுதலானுங், 2. உண்டாய் நஞ்சை, 3. மந்திர மறையவை அப்பர்  – 1. பண்காட்டிப்படி, 2. தூண்டு சுடர்மேனித் சுந்தரர்  – 1. படங்கொள் நாகஞ் தேவார பாடல் பெற்ற 276 சிவா தலங்களில்  11 வது தேவார தலமாகும் , காவேரி வடகரை தேவார தலங்களில் 11 வது தலமாகும் , 51 சக்தி பீடங்களில் பிரணவ சக்தி பீடமாகும் , கும்பகோணம் அருகில் உள்ள நவகிரக தலங்களில் புதனுக்கு உரிய முதன்மையான தலமாகும் . சிவபெருமானின் 64  வடிவங்களில் 43 வது வடிவமான “அகோரமூர்த்தி ” இவ் தலத்தில் தான் மிக பெரிய வடிவில் அருள் தருகிறார் , சிவபெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்த ஆதி சிதம்பரம் எ...

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி அறிவிப்பு..

  Farmers Grievance Redressal Day Meeting : மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படும். விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவுகிறது. மேலும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும். அதேபோல் இந்த மாதம் ஆகஸ்ட் 31ம் தேதி நடக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri Manmatheeswarar Temple – Kuthalam ஸ்ரீ மன்மதீஸ்வரர் கோயில் – குத்தாலம்

  இறைவன்   : மன்மதீஸ்வரர்  இறைவி  : ஆதி சக்தி  ஊர் :  குத்தாலம்  மாவட்டம் :  மயிலாடுதுறை , தமிழ்நாடு  Sri Manmatheeswarar Temple – Kuthalam ஸ்ரீ மன்மதீஸ்வரர் கோயில் – குத்தாலம்  கோயில் அமைப்பு :  கும்பகோணம் மாயவரம் சாலையில் உள்ள குத்தாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . கோயில் நுழைவு வாயிலில் மன்மதன் மற்றும் ரதிதேவி இறைவனை பூஜை செய்வது போல் சுதை சிற்பத்தை வடித்துள்ளார்கள் . அதை கடந்து நாம் உள்ளே சென்றால் கோயிலின் மற்றொரு நுழைவு வாயில் ராஜ கோபுரம் இல்லாமல் உள்ளது , அதில் இறைவன் குடும்ப சகிதமாக இருக்கும் சுதை சிற்பம் உள்ளது . அதை கடந்து நாம் உள்ளே சென்றால் கொடிக்கம்பம் மற்றும் பலி பீடத்தை நாம் தரிசிக்கலாம் , பின்பு உள்ளே சென்றால் இறைவன் மன்மதேஸ்வரரை தரிசனம் செய்யலாம் .  இறைவன் சற்று பெரிய பானத்தில் நமக்கு காட்சி தருகிறார் . இவரை வணங்கினால் பிரித்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள் மற்றும் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை பிறக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவருக்கு இடது புறத்தில் தாயார் சன்னதி உள்ளது ....