இறைவன் : மன்மதீஸ்வரர்
இறைவி : ஆதி சக்தி
ஊர் : குத்தாலம்
மாவட்டம் : மயிலாடுதுறை , தமிழ்நாடு
Sri Manmatheeswarar Temple – Kuthalam ஸ்ரீ மன்மதீஸ்வரர் கோயில் – குத்தாலம் |
கோயில் அமைப்பு :
கும்பகோணம் மாயவரம் சாலையில் உள்ள குத்தாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . கோயில் நுழைவு வாயிலில் மன்மதன் மற்றும் ரதிதேவி இறைவனை பூஜை செய்வது போல் சுதை சிற்பத்தை வடித்துள்ளார்கள் . அதை கடந்து நாம் உள்ளே சென்றால் கோயிலின் மற்றொரு நுழைவு வாயில் ராஜ கோபுரம் இல்லாமல் உள்ளது , அதில் இறைவன் குடும்ப சகிதமாக இருக்கும் சுதை சிற்பம் உள்ளது . அதை கடந்து நாம் உள்ளே சென்றால் கொடிக்கம்பம் மற்றும் பலி பீடத்தை நாம் தரிசிக்கலாம் , பின்பு உள்ளே சென்றால் இறைவன் மன்மதேஸ்வரரை தரிசனம் செய்யலாம் .
இறைவன் சற்று பெரிய பானத்தில் நமக்கு காட்சி தருகிறார் . இவரை வணங்கினால் பிரித்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள் மற்றும் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை பிறக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவருக்கு இடது புறத்தில் தாயார் சன்னதி உள்ளது .
தல வரலாறு :
பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கு ஊடல் ஏற்பட்டு பரமேஸ்வரன் தியானத்தில் அமர்ந்தார். தியானத்தில் அமர்ந்ததால் உலகில் பிறப்பு , இறப்பு பாதிக்கப்பட்டது . பூமாதேவி பாரம் தாங்காமல் தேவேந்திரனிடம் முறையிட தேவர்கள் பிரம்ம தேவனிடம் முறையிட்டனர் , பிரமதேவர் சிவபெருமானும் பார்வதியும் ஒன்று சேர்ந்ததால்தான் இது நடக்கும் என்று கூற அதற்கு என்ன வழி என்று கேக்க பிரம்மதேவன் மன்மதனை பார்த்து சிவபெருமான் மீது புஷ்ப பாணத்தை தொடுத்தால் சிவபெருமான் தியானத்தில் இருந்து விழிக்க முடியும் என்று கூறினார் .
மன்மதனும் சிவபெருமான் மீது புஷ்ப பாணத்தை முதுகு புறத்தில் தொடுத்தார் , சிவபெருமான் திரும்பி பாக்க மன்மதன் சாம்பலாகி போனான் .செய்தியை அறிந்து ரதிதேவி சிவபெருமானிடம் முறையிட அவர் பூலோகத்தில் லிகு ஜாரண்யம் என்று சொல்லக்கூடிய பெண்ணும் தவம் செய்து மன்மதனை அடைவாய் என்று சொல்ல , ரதிதேவியும் அவ்வாறு தவம் செய்ய இறைவன் மனம் இறங்கி ரதிதேவியிடம் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று குத்தாலத்தில் மன்மதன் உயிர்த்தெழுவார் என்று கூறினார் . அதுபோல் மன்மதன் உயிர்பித்து எழுந்து இத்தலத்தில் சிவாலயம் அமைத்து சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதால் இறைவனுக்கு மன்மதேஸ்வரர் என்றும் இத்தலத்திற்கு மன்மதீஸ்வரம் என்று பெயரும் ஏற்பட்டது
பரிகாரம் :
இத்தல இறைவனை பௌர்ணமி நாளில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை அபிஷேகம் செய்தால் ஒன்று சேர்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 . 30 மணி முதல் , மதியம் 12 மணி வரை , மாலை 5. ௦௦ மணி முதல் இரவு 8 .00 மணி வரை .
செல்லும் வழி :
கும்பகோணம் மாயவரம் சாலையில் உள்ள குத்தாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . கும்பகோணத்தில் இருந்தும் மாயவரத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் உள்ளன
அருகில் உள்ள தலங்கள் :
1 . உத்தவேதீஸ்வரர் கோயில் – குத்தாலம் ( தேவார சிவா தலம்)
2 .மேலைத்திருமணஞ்சேரி – ஐராவதேஸ்வரர் கோயில் (பாடல் பெற்ற தலம் )
3 . திருமணஞ்சேரி – நாதஸ்வாமி கோயில் ( பாடல் பெற்ற தலம் )
4. ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் – திருவேள்விக்குடி
location:
Comments
Post a Comment