Farmers Grievance Redressal Day Meeting : மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம்.
இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படும். விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவுகிறது. மேலும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும். அதேபோல் இந்த மாதம் ஆகஸ்ட் 31ம் தேதி நடக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment