naturopathy remedies benefits of eating kadukkai powder every night தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
கடுக்காயை பயன்படுத்தும் முன் சுத்தி செய்வது மிகவும் அவசியம், கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் அது நஞ்சாகும்.
சுத்தி செய்யும் முறை: கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்து, சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்
கடுக்காய்ப் பொடியை 2 கிராம், தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.
25 கிராம் கடுக்காய்ப் பொடியில், ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும். இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.
கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.
இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலோத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.
Comments
Post a Comment