எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
ஃபெங் சூயி என்பது ஒரு பழங்கால சீனக் கலையாகும். இது கட்டிடங்கள், பொருள்கள் மற்றும் இடத்தை ஒரு சூழலில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் அடையச் செய்கிறது. சுருக்கமாக கூற வேண்டுமானால், சீனாவின் வாஸ்து சாஸ்திர முறை தான் ஃபெங் சூயி. இந்த ஃபெங் சூயி மூலம் ஒருவரின் வாழ்வில் பலவிதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதேப் போல் ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. முக்கியமாக வாஸ்து தோஷத்தில் இருந்து விடுபட ஃபெங் சூயி உதவும். இப்போது ஃபெங் சூயி படி எந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், செல்வம் பெருகுவதோடு, தொழிலில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
சிரிக்கும் புத்தர் ஃபெங் சூயி முறையில், சிரிக்கும் புத்தர் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதனால் சிரிக்கும் புத்தரை வீட்டின் ஹால், படிக்கும் அறை, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் வைப்பது நல்லது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும் என்பது நம்பிக்கை.
உலோக ஆமை
ஃபெங் சூயி படி, உலோக ஆமையை வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் வீட்டில் ஆமையை வைத்திருந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம். அதே வேளையில் ரகசிய எதிரிகளை வெல்லும் ஆற்றலும் கிடைக்கும். வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால், உலோக ஆமையை வடக்கு திசையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஜாடியில் வையுங்கள். ஏனென்றால் வடக்கு பகுதி குபேரனின் இருப்பிடமாகும்.

சீன நாணயங்கள்
ஃபெங் சூயியில் சீன நாணயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் இந்த நாணயங்களை பணம் வைக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் வீட்டின் வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதோடு இந்த நாணயங்கள் வீட்டின் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதாகவும் நம்பப்படுகிறது.

உலோக பிரமீடு ஃபெங் சூயி படி, வீட்டின் வடக்கு திசையில் உலோக பிரமீட்டை வைப்பது நல்லதாக கருதப்படுகிறது. ஒருவரது வீட்டில் இந்த உலோக பிரமீடு இருந்தால், அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அழித்து, வீட்டின் நிதி நிலையை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பிரமீடை வைப்பதற்கு முன் இதை கங்கை நீரால் சுத்திகரிக்க வேண்டும்.
Comments
Post a Comment