ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
ரயில் பாதை பராமரிப்பு பணிகள்:
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை- திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை- திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன.
திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து:
இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (1 6731/16732) மற்றும் சென்னை - திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606) ஆகியவை ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூரிலிருந்து காலை 12.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், அடுத்த நாள் காலை 10:15 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் 29 நிறுத்தங்களில் நின்று செல்லும்.
திருச்செந்தூர் ரயில்கள்:
திருச்செந்தூர்-சென்னை இடையக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரவு 8:25 மணிக்கு புறப்படுகிறது.
திருச்செந்தூர் ரயில்கள்:
திருச்செந்தூர்-சென்னை இடையக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரவு 8:25 மணிக்கு புறப்படுகிறது.
சமீபத்தில் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 800 பயணிகள் சிக்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 1 முதல்:
வெள்ளத்தால் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ரயில்வே தண்டவாளங்கள் பயங்கர சேதமடைந்து அதனை சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனால் அடிக்கடி ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 1 முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment