Skip to main content

ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் – திருவேள்விக்குடி




இறைவன் :கல்யாண சுந்தரேஸ்வரர், 01_UserUpload.Net.JPG - 5.9 MB மணவாளேஸ்வரர்

இறைவி :பரிமள சுகந்த நாயகி, கௌதகேஸ்வரர்

தீர்த்தம்:மங்கள தீர்த்தம், கௌதகா பந்தன தீர்த்தம்

புராண பெயர்:திருவேள்விக்குடி

ஊர்:திருவேள்விக்குடி

மாவட்டம் : மயிலாடுதுறை , தமிழ்நாடு

பாடியவர்கள் :  சம்பந்தர் , சுந்தரர்

செழும் திருவேள்விக் குடியில் திகழ் மணவாள நல்கோலம்

பொழிந்தபுனல் பொன்னி மேவும் பினிதத் துருத்தி இரவில்

தழும்பிய தன்மையும் கூடத் தண்தமிழ் மாலையில் பாடிக்

கொழுந்து வெண்திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார்

– திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 77 வது தலமாகும் , தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை தேவார தலங்களில் 23 வது தலமாகும். சிவன் பார்வதி கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.

கோவில் அமைப்பு :

கோயிலுக்கு செல்ல ஒரு நுழைவு வாயில் உள்ளது .நுழைவு வாயிலின் வலது புறத்தில் கோயிலின் தலதீர்த்தம் அமைந்துள்ளது . வாயிலை கடந்து உள்ளே சென்றால்  மூன்று நிலை இராஜகோபுரத்தை நாம் தரிசிக்கலாம் . இக்கோயிலானது இரண்டு பிரகாரங்களை கொண்டுள்ளது ,கருவறைக்கு முன்னே அர்த்தமண்டபம் , மகா மண்டபம் உள்ளது . அர்த்தமண்டபத்தில் முன் துவாரகா பாலகர்கள் உள்ளார்கள் . முதல் பிரகாரத்தில் தென்முக கடவுள் கிழக்கு நோக்கி , வலம்சுழி விநாயகர் ,வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர்,கோதண்டராமர் ,கஜலக்ஷ்மி ,விஷ்ணு துர்க்கை ,சண்டிகேஸ்வரர்,அகத்தியர் ,ஈசானமூர்த்தி ,பைரவர் ,நடராஜர்  ஆகியோர்கள் சன்னதி உள்ளது .இறைவனின் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தக்ஷ்ணாமூர்த்தி, லிங்கோத்பவர் ,சந்திரசேகரர் ,அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர்கள் உள்ளார்கள் . முதல் பிராகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. இதன்பின் புறத்தில் ஈசானமூர்த்தி கோயில்’ உள்ளது.

தல வரலாறு

பரத மாமுனிவர் அன்னை பார்வதி தேவி தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் யாக குண்டத்தில் பார்வதி தேவியை குழந்தையாக பிறக்க செய்கிறார். சிவபெருமானின் மேல் கொண்ட அதீத பக்தியின் காரணமாக அந்த குழந்தை வளர்ந்தபின் காதல் கொள்கிறாள். சிவபெருமானையே கணவனாக நினைத்து மணலில் சிவபெருமானின் உருவத்தை உருவாக்குகிறாள்.

 அம்பிகை ஈசனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மணலால் லிங்கம் செய்து வைத்து பூஜை செய்து வர 17வது திங்கட்கிழமை சிவபெருமான் தோன்றி ஈஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்துச் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.

அரசகுமாரன் ஒருவனுக்கு மணம்புரிய நிச்சயித்திருந்த பெண்ணை, மணம் நிறைவேறு முன் அவள் பெற்றோர் இறக்கவே, அவள் சுற்றத்தார் கொடாது மறுத்தனர். அரசகுமாரன் இறைவனைநோக்கித் தவஞ் செய்து வேண்டினான். இறைவன் அப்பெண்ணை ஒருபூதத்தின்மூலம் கொண்டுவந்து அவனுக்குத் திருமணவேள்வி செய்தருளியதாக வரலாறு சொல்லப்படுகிறது. இத்தலம் திருத்துருத்தியோடு சேர்த்துப் பாடப்பட்டுள்ளது.

பரிகாரம் :

இத்தலமாது ஒரு திருமணத்தடை பரிகார தலமாகும் , இங்கு வந்து பிராத்தனை செய்து சென்றால்  உங்களுக்கு இருக்கும் திருமணத் தடை நீங்கி உடனடியாகத் திருமணம் நடக்கும். இங்குள்ள இறைவன் – மணவாளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அருகில் உள்ள குத்தாலம் ,திருமணச்சேரி ,மேல திருமணச்சேரி ஆகிய இடங்களுக்கும் சென்று பரிகாரம் செய்தால் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நடக்கும் . இத்தலங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புவுடையவை .

கல்வெட்டுகள் :

செம்பியன் மாதேவி ,ராஜராஜ சோழன் , பராக்கிரம சோழன் கல்வெட்டுகள் இங்கு உள்ளன .இத்தலத்திற்கு கருங்கல் திருப்பணி செய்தவர் உத்தமசோழனின் தாயார் சாம்பியன் மாதேவி ஆவார் . கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளது.

Photos:

https://alayamtrails.blogspot.com/2023/07/sri-kalyanasundareswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 8 .00 – 11 .30  மணி   வரை , மாலை  5 .00 – 7 .00 மணி வரை

Contact Number : திரு . வைத்தியநாதன் சிவம் குருக்கள் – 04364 – 235462

செல்லும் வழி :

மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மி. தொலைவில் திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. குத்தாலம் தாண்டி வரும் பாலத்தை கடந்தால் ஒரு சந்திப்பு வரும் அங்கிருந்து நீங்கள் ஆட்டோ எடுத்து செல்ல வேண்டும் .

English:

Thiruvelvikudi is situated at a distance of about 14 kms from Mayiladuthurai on the Mayiladuthurai to Kumbakonam route. From Kuthalam. This is one of the 276 Devara Paadal Petra Shiva Sthalams and 23rd Shiva Sthalam on the northern bank of the river Cauvery in Chozha Nadu . At Thiruvelvikudi, the wedding ceremony including the yagna was performed. This is the great place where the earthly wedding of Lord Shiva and Goddess Parvathy took place.

அருகில் உள்ள தலங்கள் :

1 . உத்தவேதீஸ்வரர் கோயில் – குத்தாலம் ( தேவார சிவா தலம்)

2 .மேலைத்திருமணஞ்சேரி – ஐராவதேஸ்வரர் கோயில் (பாடல் பெற்ற தலம் )

3 . திருமணஞ்சேரி – நாதஸ்வாமி கோயில் ( பாடல் பெற்ற தலம் )




Location:

Comments

Popular posts from this blog

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.

Free Rudraksha Diksha Kit From Isha Foundation

WhatsApp Group Join Now Telegram Group Join Now   Free Rudraksha Diksha Kit From Isha Foundation Get a free rudraksha diksha kit energized by Sadhguru on Mahashivratri. Bring home the Grace of Shiva through Rudraksha Diksha. What is Rudraksha? Rudraksha is the teardrop of Shiva. The legend goes that once, Shiva sat for meditation for a long period of time. His ecstasy was such that it made him absolutely still, unmoving. He seemingly did not even breathe, and everyone thought he was dead. There was only one sign of life – the tears of ecstasy that dribbled from his eyes. These teardrops fell upon the earth and became Rudraksha, ‘Shiva’s tears. To get Rudraksha kit you need to register and give your shipping address details. There are no shipping charges to get this kit. It is supportive for physical and mental balance, assists in meditation, cleanses the aura and shields against negative energies. The kit contains the following materials...

Friends Track Call Taxi & Cabs in Mayiladuthurai Mayiladuthurai 𝑀𝑎𝑦𝑖𝑙𝑎𝑑𝑢𝑡ℎ𝑢𝑟𝑎𝑖'𝑠 𝑁𝑜. 1 𝐶𝑎𝑙𝑙 𝑇𝑎𝑥𝑖 !! உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள் மிக மிக குறைந்தக் கட்டணத்தில்

  𝑀𝑎𝑦𝑖𝑙𝑎𝑑𝑢𝑡ℎ𝑢𝑟𝑎𝑖'𝑠 𝑁𝑜. 1 𝐶𝑎𝑙𝑙 𝑇𝑎𝑥𝑖 !! WhatsApp Group Join Now Telegram Group Join Now share button.txt Displaying share button.txt. உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள் மிக மிக குறைந்தக் கட்டணத்தில் Book Car Now 𝑀𝑎𝑦𝑖𝑙𝑎𝑑𝑢𝑡ℎ𝑢𝑟𝑎𝑖'𝑠 𝑁𝑜. 1 𝐶𝑎𝑙𝑙 𝑇𝑎𝑥𝑖 !! உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள் மிக மிக குறைந்தக் கட்டணத்தில்... WhatsApp Group Join Now Telegram Group Join Now share button.txt Displaying share button.txt. JOIN SHIRTS COLLECTION WHATS AP GROUP -  CLICK TO JOIN  #FriendsTrack #mayiladuthurai Call Taxi Service #Calltaxi Service #Taxi #TaxiTie #TIEUP #FriendsTrackTaxi #lowCost #LowCostTaxi #TaxiService #Cab #mayiladuthuraidistrict #airportpickup #AirportDrop #Sirkazhi #Kumbakonam #BestCab #LowCostCab #LowCostTaxi #TourTravel #Transport #Travels #Car #Rental_Car #RentalCar #Rent_Car #mayavaram ...