சேமிப்புக் கணக்குகளுக்கு மாதம் தோறும் வட்டிச் செலுத்தப்படும்.
என ஐடிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு ஒவ்வொரு காலாண்டும் வட்டியை செலுத்தி வருகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கி விதிகளின்படி
வங்கிகள் ஒவ்வொரு மாதமும் வட்டியை செலுத்த முடியும். இருப்பினும், பெரும்பாலான வங்கிகள் ஒவ்வொரு மாதமும் வட்டியை செலுத்துவதில்லை.
இந்நிலையில், ஐடிஎஃப்சி வங்கி (IDFC First Bank) தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு மாதம் தோறும் வட்டி செலுத்துவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வருமானம் பெற முடியும்; காலாண்டு அல்லது ஆண்டு இறுதிக்கு காத்திருக்க தேவையில்லை.
ஐடிஎஃப்சி வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் மாதம் தோறும் வட்டி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் இந்த வசதி பொருந்தும்.

தினசரி அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு ஒட்டுமொத்த வட்டித் தொகை மாதம் தோறும் செலுத்தப்படும். மற்ற சேவைகள் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. வட்டி வருமானத்துக்காக மாதக் கணக்கில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment