மீண்டும் ஊரடங்கா? தளர்வுகளா? முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் தொற்றின் இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதன்பிறகு தினசரி புதிய பாதிப்புகள் அதிகரித்து வந்தன. ஒருகட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 35,000 பேருக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 10ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், மே 24ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒரே மாதிரியான தளர்வுகள் அமலில் உள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான தடை, தியேட்டர்களை திறப்பதற்கான தடை உள்ளிட்ட சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகள் வருகிற 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கில் தளர்வுகளையோ அல்லது கட்டுப்பாடுகளையோ விதிக்கும் போது, மூத்த அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், இதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தே அறிவித்து வருகிறார்.
அந்த வகையில், சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார். ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதே நிலை நீடித்து கொரோனா தொற்றின் சதவீதம் அதிகரித்தால், மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதேசமயம் தளர்வுகள் அளிக்கப்படும் பட்சத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது, 50 சதவீதம் பார்வையாளார்களுடன் தியேட்டர்கள் செயல்ப்ட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment