இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தோராயமாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளன
ஹைலைட்ஸ்:
- ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
- வேலை தேடுவோருக்கு ஹேப்பி நியூஸ்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவை 2021ஆம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் மகிழ்ச்சியான தகவல் என்னவென்றால், ஒரு லட்சம் ஃப்ரஷர்களை பணியில் அமர்த்த இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த நிதியாண்டில் 40,000 ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல, இன்ஃபோசிஸ் நிறுவனம் 26,000 ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஹெச்சிஎல் நிறுவனம் 12,000 ஃப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
விப்ரோ நிறுவனம் கடந்த நிதியாண்டில் 9,000 ஃப்ரஷர்களை பணியில் அமர்த்தியது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக ஃப்ரஷர்களை பணியமர்த்தப்போவதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தாண்டில், தோராயமாக 1 லட்சம் ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment