Skip to main content

திருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க!

 ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (நவம்பர் 24) செல்கிறார். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




 மேலும் போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக திருப்பதி காவல்துறை எஸ்.பி ஏ.ரமேஷ் ரெட்டி கூறுகையில், திருமலைக்கு வரும்

பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு முக்கியமான அறிவிப்பு. வரும் 24ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

அவருடன் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்திரன் மற்றும் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் வருகின்றனர். இதையொட்டி திருமலை, திருப்பதி, ரேணிகுண்டாவில் 24ஆம் தேதி போக்குவரத்தில் மாற்றங்களும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

* நவம்பர் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் 11.45 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும் அனைத்து APSRTC பேருந்துகளும் விவிஐபி சாலைக்கு எதிரான வழித்தடத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது திருப்பதி பேருந்து நிலையம் முதல் திருமலை வரையிலும், மீண்டும் திருமலை பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி வரையிலும் பின்பற்ற வேண்டும்.

உலகிலேயே ஃபர்ஸ்ட் டைம்; ஆச்சரியப்படுத்திய திருப்பதி திருமலை!

* நவம்பர் 24ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருமலைக்கு வரும் அனைத்து தனியார் மற்றும் பொது வாகனங்களும் கரகம்பாடி சாலை வழியாகவே உள்நுழைய வேண்டும். மற்ற அனைத்து வழித்தடங்களும் சீல் வைக்கப்பட உள்ளது.

* பிலெர்/ மதனப்பள்ளி, வேலூர்/ சித்தூர் வழித்தடத்தில் வரும் APSRTC பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் செர்லோபள்ளி - ஸூ பார்க் சாலை வழியாகத் தான் நகருக்குள் அனுமதிக்கப்படுவர்.

* ஸ்ரீனிவாசா மங்காபுரம் - திருப்பதி சாலையில் வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் நாளைய தினம் (நவம்பர் 24) செர்லோபள்ளி - ஸூ பார்க் சாலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



* காலை 9 மணி மாலை 4 மணி வரை ராமானுஜபள்ளி சர்கிளில் இருந்து அலிபிரி சர்க்கிள் வரையிலான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த வழித்தடத்தில் வாகனங்கள் இயக்குவதும் தடை செய்யப்படுகிறது.

* திருமலையில் ஸ்ரீ பத்மாவதி கெஸ்ட் ஹவுஸிற்கு அருகே வாகனப் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.