சென்னை :'இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றுபுயலாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், இன்று கன மழைபெய்யும்; தென் மாவட்டங்களில், நாளை அதி கன மழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில், நேற்று முன்தினம் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாகவும், பின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இது, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில், காரைக்காலுக்கு தென் கிழக்கே, 975 கி.மீ., துாரத்தில் நிலை கொண்டு உள்ளது. இது, இன்று காலை புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையை கடந்து, குமரி கடல் பகுதிக்கு நகரும். INSTALL & TRACK CYCLONE DETAILS இதன் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் நகரங்களில், ஒரு சிலஇடங்களில், லேசானது முதல் மித...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.