தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்?
பொங்கல் பரிசு போன்று தீபாவளி பரிசு
கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்தால் பொருளாதாரம் மேம்படும் என்று பல்வேறு நிபுணர்களும் கூறி வருகின்றனர். அந்த வகையில் பொங்கல் பரிசு போன்று தீபாவளிக்கும் பரிசு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பொங்கல் பரிசில் இலவச வேட்டி, சேலை, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருட்கள், ரூ.1,000 ரொக்கம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
தமிழக அரசின் திட்டம் என்ன?
இதேபோல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களும் இருக்குமா? இல்லை ரொக்கம் மட்டும் தீபாவளி பரிசாக கிடைக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாருக்கு தலா ரூ.2,000 வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தீபாவளி பரிசு கிடைக்குமா?
அவ்வாறு தமிழக அரசு முடிவெடுக்கும் பட்சத்தில் 1.94 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,030 கோடி அளவிற்கு மாநில அரசுக்கு செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்கள் தமிழக மக்கள் மத்தியில் அடிக்கடி உலா வந்து, இதுவொரு கோரிக்கையாக எழத் தொடங்கியிருக்கிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களைக் கவரவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் மாதம் ரூ.3,000; தமிழக முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம்
அந்த வகையில் தீபாவளி பரிசு தமிழக மக்களுக்கு வரப்பிரசாதமாக மட்டுமல்லாது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் ஆதரவாக மாறக் கூடும். உட்கட்சி பூசலில் இருந்து மெல்ல கரையேறும் வரை அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் மிகக் கவனமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்படி செயல்பட்டால் எதிர்க்கட்சிகளின் வியூகத்திற்கும் வேட்டு வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment