வாஸ்து மூலம் வாழ்க்கையை செழிப்பாக்குவது எப்படி?
POSTED BY ARUN SAJAN
இம்மண்ணில் தோன்றிய மாந்தர்களில் பெரும்பான்மையினர், வளமான வாழ்க்கையை வாழ எண்ணுகின்றனர். அந்த வகையில் நீங்கள் எண்ணிய வாழ்க்கையை பெற கடின உழைப்பு மற்றும் உங்களுக்குள் உறைந்திருக்கும் திறமை பெரிதும் உதவினாலும் கூட, உங்கள் இல்லத்தின் அமைப்பு, உங்கள் வாகன வகையறா, உங்கள் கிரகங்கள் என அனைத்தும் சரியான நிலையில் இருந்தால் மட்டுமே செழிப்பான-சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும்.
ஆகையால், நீங்கள் இருக்கும் இல்லம் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் வாகன வகையறாக்களின் அமைப்பு மற்றும் அவற்றின் வாஸ்து நிலைகளை பற்றி இந்த பதிப்பில் படித்தறியுங்கள்..
உங்கள் வாழ்வை வளமாக்க உதவும் வாஸ்து குறிப்புகளை இங்கே படித்தறியுங்கள்..
1. வீட்டின் நுழைவாயில்!
வீட்டின் நுழைவாயிலில் இருந்து வாஸ்து குறிப்புகளை பற்றி அறிவதில் நுழைவோம் வாருங்கள். உங்கள் வீட்டு நுழைவாயிலின் அமைப்பை பொறுத்து உங்கள் செல்வச்செழிப்பு அமையும். உங்கள் வீட்டின் நுழைவாயில் கிழக்கு அல்லது வடக்கு புறம் பார்த்திருக்குமாறு அமைக்க வேண்டும். தேக்கு மரத்தாலான கதவை பயன்படுத்துவது நல்லது. உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிறைய காலணிகளை வீட்டு வாயிலின் முன் அல்லது அருகில் கழற்றி விடுவதை தவிர்த்தல் வேண்டும். மனையின் வாயிற்கதவு இலகுவாக திறந்து மூடக்கூடியதாக, சப்தம் எழுப்பததாக இருத்தல் அவசியம்.
2. தூங்கும் அறை
நிம்மதியாக தூங்கி எழுந்தவரால் மட்டுமே புத்துணர்வுடன் பணியாற்ற செய்ய இயலும். அவ்வகையில், உங்களது தூங்கும் ரூம் நல்ல காற்றோட்டமானதாக, வெளிச்சமானதாக இருக்க வேண்டும். தூங்கும் அறையில் எவ்வித துர்நாற்றமும் வீசாதவண்ணம் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உங்களின் அறையின் சாளரங்களை குறைந்தது 20 நிமிடங்களாவது மூடாது வைத்தல் அவசியம். நீங்கள் உறங்குகையில், தெற்குப்பக்கம் தலையை வைத்து உறங்குவது செழிப்பையும், நலத்தையும் தரும்.
3. செழிப்பின் அடையாளம்!
செழிப்பின் அடையாளமாக கருதப்படுவது புத்தர் சிலை. புத்தர் சிலையை டிராயிங் அறை, கிச்சன் அல்லது தோட்டத்தில் வைத்தால், உங்கள் வாழ்வு செழித்தோங்கும். மேலும் சிலையை அல்லது புத்தர் புகைப்படத்தை எத்துணை பெரிதாக வைக்கிறீரோ, அத்துணை அளவு செழிப்படையலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
4. வாஸ்து ஓவியங்கள்
வாஸ்து ஓவிய படைப்புகளான கோல்டன் மீன் ஓவியம், அருவியின் ஓவியம், ஓடிக்கொண்டிருக்கும் நீர்நிலை இது போன்ற கூறுகள் நிறைந்த படங்களை வீட்டு சுவர்களில் மாட்டி வைத்தால், வாஸ்து பிரகாரம் உங்கள் வாழ்வில் செழிப்பு உண்டாகும்
5. காற்றில் ஒலி..
காற்றடித்தால் ஒலி எழுப்பக்கூடிய விண்ட் சிம்ஸ் எனப்படும் காற்றுக் கால்களை இல்லத்தில் தொங்க விடுவது, உங்கள் வாழ்க்கையை பாசிட்டிவ் எண்ணங்களுடன் நகர்த்த உதவும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
6. கடிகாரம்!
உங்கள் வீட்டில் மட்டுப்படும் கடிகாரங்கள் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் அமைய வேண்டும். மேலும் வீட்டில் இருக்கும் அனைத்து கடிகாரங்களும் ஓடக்கூடிய நிலையில் இருக்க வேண்டியது அவசியம். கடிகாரங்கள் மெதுவாக ஓடினாலோ, நின்றுவிட்டாலோ அவை உங்கள் பணவரவின் வீக்கத்தை குறிப்பிடுவதாக வாஸ்து தெரிவிக்கிறது.
7. பறவைக்கு உணவு!
மற்ற உயிர்களுக்கு அன்னமிட்டு காப்பது உங்கள் வாழ்வை வளமாக்கும். ஆகையால், பறவைகளுக்கு உங்கள் வீட்டு பால்கனியில் அல்லது முற்றத்தில், முன்புறத்தில் உணவு வையுங்கள். இது உங்கள் வீட்டின் செல்வச்செழிப்பை அதிகரிக்க உதவும்.
8. உங்கள் பிம்பம்..
உங்கள் பிம்பத்தை பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடியை வீட்டின் முகப்பில், நுழைவாயிலுக்கு நேராக மாட்டுவதை தவிர்த்தல் வேண்டும். மேலும் கண்ணாடியை உங்கள் வீட்டு பணப்பெட்டி இருக்கும் இடத்தில, அந்த அலமாரியின் மீது மாட்டுவது, பணத்தை பலமடங்காக்க உதவும்.
வீட்டில் ஏதேனும் உடைந்த கண்ணாடி, கண்ணாடி பொருட்கள், கடிகாரம், எலெக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால், அவற்றை கட்டாயம் அகற்றிவிட வேண்டும்.
9. பர்பிள் நிறம்..!
பர்பிள் நிறம் செழிப்பை அதிகரிக்க உதவும்; ஆகையால் பர்பிள் நிறம் கொண்ட ஆர்கிட் பூக்கள் அல்லது பர்பிள் நிற ஜாடிகள், பர்பிள் நிற பொருட்களை வீட்டில் வைத்தல் செல்வச்செழிப்பிற்கு வழிவகுக்கும்.
10. மீன் தொட்டி!
மீன் தொட்டி அதாவது அழகான உட்கட்டமைப்பு கொண்ட, நல்ல சுறுசுறுப்பு தன்மை கொண்ட மீன்கள் அல்லது மீன் நிறைந்த மீன் தொட்டியை வீட்டின் ஹாலில் தென்கிழக்கு திசையில் வைப்பது நல்லது; மேலும் மற்ற அறைகளில் மீன் தொட்டியை வடக்கு திசையில் வைப்பது வாஸ்துப்படி சிறந்தது.
வீட்டில் மீன்தொட்டி வைப்பதால், வீட்டின் அமைதி மற்றும் செழிப்பு பெருகும். எப்பொழுதும் அசைந்து நீந்திக்கொண்டே இருக்கும் மீன், உங்கள் வாழ்வின் நீரோட்ட போன்ற பணவரவினை குறிக்கிறது.
Read more at: Arun Sajan Blog
Read more at: Arun Sajan Blog
Comments
Post a Comment