Skip to main content

கலியுகம் முடிந்து பூமி அழிந்தபின் என்ன நடக்கும்? மீண்டும் மனித இனம் தோன்றுமா?

கலியுகம் முடிந்து பூமி அழிந்தபின் என்ன நடக்கும்? மீண்டும் மனித

இனம் தோன்றுமா?



POSTED BY ARUN SAJAN 


lies ahead after Kaliyuga ends


மஹாபாரத குருக்ஷேத்திர யுத்தத்தின் போதே எப்படி துவாபரயுகம் முடிந்துவிட்டது என்பதும், அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும்போது ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு கால ஓட்டத்தை நிறுத்தினார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. கீதோபதேசம் முடிந்ததும் கலியுகம் ஆரம்பம் ஆனது, கிருஷ்ணர் பூதவுடலை விட்டு வைகுண்டம் புறப்பட்டதும் கலியுகம் பரவ ஆரம்பித்தது

இயற்கை சீற்றங்கள்


இயற்கை சீற்றங்கள்

வேத சாஸ்திரங்களின்படி கலி அதன் உச்சத்தை அடைந்ததும், இன்னொரு கொந்தளிப்பு உருவாகும். போர்கள் என்றில்லை, மக்கள் தொகை அதிவேகப் பெருக்கம், இயற்கை சீற்றங்கள் போன்றவை ஏற்படும். அதன் பிறகு, உயர்ந்த சைதன்ய நிலையில் நல்ல முன்னேற்றத்துடன் கூடிய புதியதொரு சகாப்தத்தில் இந்த உலகம் பரிணமிக்கும்.

மந்திரங்கள்


மந்திரங்கள்

சில பழங்கால பதிவுகளின் படி, "கலியுகத்தில் சூரியனிடமிருந்து வெகு தொலைவில், சூட்சுமம் என்பது கீழ்நோக்கி இருக்கும். மனிதர்களுக்கு யோகா, த்யானம், மந்த்ர யந்திரங்களை போதிப்பதில் ஒரு பயனும் இல்லை - அவர்களுக்கு அது புலப்படாது" என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

பக்தி வழி


பக்தி வழி

அவரை பொறுத்தவரை கலியுக வாழ்க்கையில் அமைதியாக கரை சேர வழி, பக்தி. பக்தியுடன் எவர் ஒருவர் தம்மை முழுமையாக இறைவனிடத்தில் சரணாகதி செய்கிறாரோ, அவர் தமக்கான சூட்சுமத்தை உருவாகிக் கொள்கிறார், மற்றும் நிம்மதியாக கரை சேர்கிறார்.

ராமாயணம்


ராமாயணம்

இராமாயணம் நற்பண்புகள், குடும்பத்தில் அன்பு, நல்ல உறவுமுறைகள், புண்ணியம், விசுவாசம், கடின உழைப்பு, நேர்மை போன்றவற்றை வரவிருக்கும் இன்னும் ஆயிரம் தலைமுறைகளுக்கும் சொல்லிக்கொண்டே இருக்கும்

மகாபாரதம்


மகாபாரதம்

மகாபாரதம் பொறாமை, கொடூரம், துரோகம், கெட்ட கர்மா, அவமதிப்பு, கொடூரமான இதயங்களும் ஆன்மாவும் பேரழிவுகரமான முடிவுக்கு வழிவகுக்கும் என்பதை உலகிற்கு பறைசாற்றுகிறது.

கலியுகம் முடிந்த பின்

கலியுகம்

முடிந்த பின் இப்போது கலியுகம் முடிவடைந்தவுடன் என்ன என்ன நடக்கும்? என்பதுதான் கேள்வி. முழு உலகமும் இருள் படுகுழியில் மூழ்கிவிட்டால், முழுமையான காலமற்ற காலப்பகுதி இருக்கும், கால சுழற்சி நின்று, ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவர்கள் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிடும். அதன் பிறகு தான், மறுபடியும் இருட்டின் முடிவில் வெளிச்சம் இருக்கும், மீண்டும் சத்யயுகத்திற்கு வழி வகுக்கும்




Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.