மத அடிப்படைவாதிகள் எப்போதுமே
முரடர்களாகவும் மூடர்களாகவுமே இருப்பார்கள் என்பது நம்ம ஊர் காவிகள் மட்டுமல்ல,
பாகிஸ்தானில் உள்ளவர்களும் உதாரணம்.
இன்று காலை ஹிந்து நாளிதழில் பார்த்த
செய்தியில்
பாகிஸ்தானிலிருந்து செயல்படுகிற ஹிஸ்புல் மொஹாஜிதீன் அமைப்பின் தலைவரான சையது சலாஹீதீன் என்பவர்,
“இந்தியாவின் எந்த மூலையிலும் எங்களால்
தாக்குதல் நடத்த முடியும். அந்த அளவிற்கு எங்கள் அமைப்பு விரிவடைந்துள்ளது” என்று
ஆணவமாக கொக்கரித்துள்ளார்.
இது ஒரு வெற்று உதார் என்பதை
படிக்கையிலேயே தெரிகிறது.
ஆனால் இந்த வெட்டி உதாரின்
விளைவுகள் என்ன ஆகும் என்பதை அந்த மனிதன் புரிந்து கொள்ளவில்லை என்பதால்தான் மூடர்
என்று அழைக்கிறேன்.
இவரெல்லாம் இப்படிச்
சொல்வதால் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை காவிகள் தேச விரோதியாக
சித்தரிக்கிறது. அவர்களுக்கு எதிராக நச்சைப் பரப்புகிறது. அவசியமே இல்லாமல்
அவர்கள் தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.
எல்லைக்கு வெளியே இருப்பவர்கள் பேசும் வெட்டி உதாருக்காக, தேசத்துக்கு உள்ளே இருப்பவர்கள் சிலுவையில் அறையப்பட வேண்டுமா?
ஏதோ சொல்வார்களே, வெறி கொண்ட
குரங்கிற்கு சாராயமும் ஊற்றிக் கொடுப்பது என்று, அது போல சங் பரிவாரக்கும்பல்
பிரச்சினை செய்ய இவரே எடுத்துக் கொடுக்கிறார்.
Comments
Post a Comment